வெள்ளி, 16 ஜூன், 2017

1991-96 ஆண்டுகளில் ஜெயா-சசி போலீஸ் +அதிகாரிகள் + குண்டர்கள் துணையோடு ஊரை அடித்த நாட்கள் மீண்டும் ...

கோவணத்தையும் உருவும் பஞ்சமா பாதகர்கள்!அந்த அபாயம் மீண்டும் திரும்புகிறது, தமிழர்களே எச்சரிக்கை!
சென்னை-ஆர்.கே.நகர் பகுதியில் அமைந்துள்ள எழில் நகர் 250 ஏக்கர் பரப்பு கொண்ட குடியிருப்புப் பகுதி. இங்கு 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வசித்து வருகின்றன. அக்குடும்பங்களைக் கூண்டோடு துரத்தியடித்துவிட்டு, அந்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்ள முயன்றுவருகிறார், அ.தி.மு.க.வின் உள்ளூர் எம்.எல்.ஏ. அவரின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து, அப்பகுதி மக்கள், எழில் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் என்ற பெயரில் அமைப்பாகத் திரண்டு போராடி வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்தை அச்சுறுத்தி நசுக்கும் விதத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் போலீசும் கைகோர்த்துக் கோண்டு, அச்சங்கத்தின் தலைவரும் 74 வயது முதியவருமான வேதக்கண் மீது கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாகப் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுதாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது, போலீசு. இதனால் சந்தேகமடைந்த குற்றவியல் நீதிபதி, வேதக்கண் மீது போடப்பட்டுள்ள கஞ்சா வழக்கு குறித்து நேர்மையான போலீசு அதிகாரியைக் கொண்டு விசாரிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக, வேதக்கண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், அவருக்கு நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கியிருக்கிறது.
ஆனாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போலீசை மீண்டும் தூண்டிவிட்டு, அந்த முதியவர் மீது 25 இலட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்து, மீண்டும் வேதக்கண்ணைச் சிறையில் அடைத்துவிட்டார்.
1991-96 ஆண்டுகளில் ஜெயா-சசி கும்பல் அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி கண்ணில் கண்ட இடங்களையும் வளைத்துப் போட்டு வந்தனர். அந்தக் கும்பலின் அடாவடித்தனமான நில அபகரிப்புக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் இரத்த சாட்சியாக உள்ளார். வினவு
அந்த அபாயம் மீண்டும் திரும்புகிறது, தமிழர்களே எச்சரிக்கை! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக