புதன், 21 ஜூன், 2017

இந்தூர் .. பாகிஸ்தான் வெற்றிக்கு பட்டாசு கொழுத்திய 15 பேர்மீது தேசதுரோக வழக்கு பதிவு

Police said sedition charges have been filed against the 15 people who ... 15 arrested for sedition in MP for celebrating Pak's Champions Trophy victory
karthikeyan. இந்தூர்: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு ஆதரவாக பட்டாசு வெடித்து கொண்டாடியதாக 15 பேர் மீது மத்தியப் பிரதேச போலீசார் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக மத்தியப்பிரதேச மாநிலம் புர்கான்பூரில் சில இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், முழக்கங்கள் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடாமல் இருக்க உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பொது இடத்தில் பட்டாசு வெடித்ததாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. பின்னர் மத்திய பிரதேசத்தின் கந்வா மாவட்டத்தில் உள்ள சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக