புதன், 21 ஜூன், 2017

RSS முதல்வர் யோகி ஆதித்தியா Facebook இல் திரிக்கப்பட்ட தகவல்கள் வன்முறை தூண்டும் பிரசாரம்

இந்து மதத்தின் பேரால் வன்முறையும், பயங்கரவாதமும் நிகழ்த்தும் பாஜக மற்றும் சங் பரிவாரத்தினர், அதற்கான ஆயுதமாக பொய்ச் செய்திகளையும், திரிக்கப்பட்ட தகவல்களையும் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இந்த முறை உத்திரபிரதேச முதலமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில், எந்த வெட்கமும் இல்லாமல் திரித்தல் வேலையைச் செய்துள்ளனர்.
ஒரு பெண் நிர்வாணமாக்க ஓடும் படத்தை அவர் பதிவு செய்து, தயை கூர்ந்து பகிரவும் என்று கேட்டிருந்தார். அதில் தாக்கப்படும் பெண் ஒரு இந்து என்று மத உணர்வுகளைத் தூண்டுதலை வெளிப்படையாகவே செய்திருந்தார்.
ஆயிரக்கணக்கானவர்கள் அதனைப் பகிர்ந்து, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர். உண்மையில் அந்தப் படம் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படமாகும். ஆதிவாசி மாணவர் போராட்டத்திற்கு எதிரான கும்பல் வன்முறையில் நிகழ்த்தப்பட்ட இக்கொடுமை – பத்திரிக்கையைகளில் வெளியாகி பலரின் மனசாட்சியை உலுக்கியது.
நிர்வாணப் படத்தில் இடம் பெற்றுள்ள பெண், மான நஷ்ட வழக்கு தொடர்ந்த நிலையில், பத்திரிக்கைகள் இச்செய்தியை சற்று விரிவாக எழுதியுள்ளனர்.
https://goo.gl/nA4oTy
உ.பி முதல்வருக்கு, அந்தப் பெண் பற்றி எதுவும் தெரியாது. அவருக்குத் தேவையெல்லாம் இந்து வெறி. அதனைக் கிளப்ப ஒரு அம்மணப் புகைப் படம். பாஜகவின் தேஜ்பூர் எம்பியும் இப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அதிகாரம் மிக்க பதவிகளில், அனைத்து உளவுத்துறை வசதிகளும் உள்ள ஒருவர் இப்படி பகிர்ந்தால் அது என்ன விளைவை ஏற்படுத்தும்? மேலும் இது முதல்முறையும் அல்ல.
அயோக்கியர்கள் இப்படித்தான் மத உணர்வுகளை அற்ப அரசியலுக்காக திசைதிருப்பி, குளிர்காய்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக