புதன், 21 ஜூன், 2017

1486 இல்தான் ராமேஸ்வரம் தீவானது ... தங்கச்சிமடம் .. அக்காமடம் .. அப்படீன்னா?

xavier.suji: ராமேஸ்வரம் முன்பு தீவல்ல.1486 ல் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில்
தனித்தீவாக மாறியது.ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்லும் யாத்ரீகர்
கள் கடலைக்கடந்து செல்ல வேண்டியிருந்தது.
ராமநாதபுரத்தின் மன்னர் சேதுபதி, தண்டத்தேவர் என்பவரை நியமித்து ஒரு படகுமூலம் பயணிகளை அக்கறைக்கு கொண்டுசெல்லவும்,அவர்
களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என உத்தரவிட்டார்.; ஆனால் தண்டத்தேவர் இந்த உத்தரவை மீறி பணம் வசூலித்தார்.இதை
அறிந்த மன்னர் அவரை சிரச்சேதம் செய்தார்.தண்டத்தேவருக்கு இரு
மனைவிகள்.கணவர் கொல்லப்பட்டதும் துக்கம் தாங்காமல் இருவரும்
தற்கொலை செய்து கொண்டனர்.

தங்கை தற்கொலை செய்த இடம் தங்கச்சிமடம் என்றும்,அக்காள் தற்கொலை செய்த இடம் அக்காமடம் என்றும் அழைக்கப்படுகிறது.
பாம்பனுக்கும்,ராமேஸ்வரத்திற்கும் இடையில் இந்த இரண்டு ஊர்களும்
உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக