வியாழன், 25 மே, 2017

இரோம் ஷர்மிளாவுக்கு இனி கொடைக்கானல்தான் நிரந்தரமாக வசிக்க போகிறார் !

இரோம் ஷர்மிளாவுக்கு இனி கொடைக்கானல்தான் வசிப்பிடம்!இந்தியாவில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்தவர் இரோம் ஷர்மிளா. மணிப்பூரில் 2000ஆம் ஆண்டுக்கு முன் நடந்த வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக இருந்த, ஆயுதப்படை சட்டத்தை அரசு வாபஸ் பெற வலியுறுத்தி, கடந்த 2000ஆம் ஆண்டு, நவம்பர் 2இல் இருந்து ஆகஸ்ட் 9, 2016 வரை 16 ஆண்டுகள் அறவழியில் உண்ணாவிரதம் இருந்தவர். சமீபத்தில் மணிப்பூர் தேர்தலில் நின்றவர், மிகக்குறைந்த வாக்குகளைப்பெற்று தோல்வியுற்றதால் மன அமைதிக்காக தென் தமிழகத்தில் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், அழகான அமைதியான இடமாக இருப்பதால் தமிழ்நாட்டில், கொடைக்கானலிலேயே நிரந்தரமாகத் தங்கப்போவதாகத் தெரிவித்தார்.

மேலும் அப்போது பேசிய இரோம் ஷர்மிளா, “எனக்கு மக்கள் அரசியலில் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது வருத்தம்தான். இருந்தாலும் தற்போது அரசியலில் நுழைய எந்தவொரு திட்டமும் இல்லை. ஒருநாள், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் ரத்தாகும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இன்னும் இரண்டு மாதங்களில் தான் காதலித்த டெஸ்மேண்ட் கவுடின்கோவை, தமிழ்நாட்டிலேயே மணக்க உள்ளதாகவும் இரோம் ஷர்மிளா திருவாய் மலர்ந்தார்.  மின்னபலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக