வியாழன், 25 மே, 2017

ஜெயலலிதாவின் சகல சொத்துக்களையும் கிரிஷ்ணப்பிரியா கைபற்றி விட்டார் ... மிடாஸ் உட்பட ..

தன்னை ஜெயலலிதாவின் வாரிசாகக் கூறி அதிமுகவில் புதிய பவர் சென்ட்டரை உருவாக்கி கட்சியின் மூத்த நிர்வாகிகளை கலங்கடித்து வருகிறார் கிருஷ்ணப்பிரியா. யார் இந்த கிருஷ்ணப்பிரியா?, இவ்வளவு காலம் எங்கிருந்தார்?. ஜெ.,வின் மரணம் வரை ஏன் தன்னை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. மர்மங்களை விளக்குகிறது இந்த கட்டுரை ஜெயலிதாவின் மிடாஸ் மது ஆலையின் வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் கிருஷ்ணப்பிரியா தான் தற்போது கவனித்து வருகிறார். மிடாஸ்  தற்போது முழுக்க முழுக்க கிருஷ்ணப்பிரியாவின் கணவர் கார்த்திகேயன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.  பையனூர், சிறுதாவூர் பங்களாக்கள் கிருஷ்ணப்பிரியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாம். ஜெயலலிதாவின் கஜானாவே தற்போது கிருஷ்ணப்பிரியாவின் கைக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

திடீரென ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு புதிய அதிகார மையமாக உருவாகியிருக்கிறார். ஆட்சியிலும், கட்சியிலும் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே அறிந்த முகம். கட்சியில் அதிகம் அறியப்படாத இவர் தற்போது ஆட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த மன்னார்குடி தரப்பும் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. யார் இந்த கிருஷ்ணப்பிரியா?

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சேர்ந்து தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இளவரசியை நான் அறிவோம். அவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா, இளையவர் ஷகீலா, மகன் விவேக். இந்த கிருஷ்ணப்பிரியாதான் தற்போது புதிய பவர் செனட்டராக உருவாகி இருக்கிறார். போயஸ் கார்டன் ராணியாக விரைவில் மகுடம் சூடப்போகும் இளவரசி இவர்தான்.
சசிகலா குடும்பத்துக்கு ஓ.பி.எஸ் அணியும், எடப்பாடி அணியில் இருக்கும் சிலரும் வெளிப்படையாக தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தாலும் கட்சியும், ஆட்சியும் மணார்குடி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தினகரன் சிறைக்கு சென்றதையடுத்து கட்சியில் வெற்றிடம் உருவாகியுள்ளது. கட்சியை வழிநடத்துகிறேன் என்று கூறி மன்னார்குடி தரப்பில் இருந்து மார் தட்டிகொண்டு யார் வந்தாலும் அவர்களை தூக்கியடிக்க கையில் தூண்டிலோடு காத்துக்கொண்டிருக்கிறது பாஜக. இதையடுத்து நடராஜன், திவாகரன் ஆகியோர் தற்போது விலகியே  இருக்கின்றனர். இந்த வெற்றிடத்தை அதிரடியாக நிரப்ப இளவரசியின் வாரிசுகள் முடிவு செய்துள்ளனராம்.

இளவரசியின் கணவர் ஜெயராமன் இறந்த பிறகு அவர் தனது பிள்ளைகளுடன் போயஸ் கார்டனிலேயே நிரந்தரமாகக் குடியேறினார். கிருஷ்ணப்பிரியா திருமணத்துக்கு முன்பு வரை ஜெயலலிதாவின் அரவணைப்பில் போயஸ் கார்டனில்தான் வளர்ந்துள்ளார். அறிவிக்கப்படாத வாரிசாக கிருஷ்ணப்ப்பிரியா கார்டனில் வளம் வந்துள்ளார்.
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப்பிறகு சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா முழுவதுமாக ஓரம் கட்டினார். அப்போது போயஸ் கார்டனில் இருந்த இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, மகன் விவேக் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு இனி எல்லாம் நாங்கதான்.. என்று பேசி வந்தனர். ஆனால் சில மாதங்களிலேயே சசிகலா மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டதை அடுத்து அவர்கள் அடக்கி வாசித்தனர்.

தனது அரசியல் பிரவேசத்தின் முதல் படியாக “கிருஷ்ணப்பிரியா ஃபவுண்டேஷன்” என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து பொதுநலப்பணிகளில் ஈடுபட்டார் கிருஷ்ணப்பிரியா, இதுகுறித்து இரண்டு வருடங்களுக்கு முன்பு வார இதழ் ஒன்று விவிவான ரிப்போர்ட் வெளியிட்டது. அதனைப் பார்த்ததும் கொதித்துப்போன ஜெயலலிதா, உனது மகள் தனியாக அரசியல் செய்கிறாளா. அவளை உடனடியாக எல்லாவற்றையும் நிறுத்தச்சொல் என்று இளவரசிக்கு கட்டளையிட்டாராம். அதிலிருந்து கிருஷ்ணப்பிரியா லைம்லைட்டுக்கு வருவதை தவிர்த்தார். இருப்பினும் விவேக்கின் மீது ஜெயலலிதா தனிப்பட்ட பாசம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. படிப்பை முடித்த விவேக் சொந்தமாக தொழில் தொடங்க ஆசைப்படுவதாக ஜெயலலிதாவிடம் இளவரசி தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களிலேயே லக்ஸ் சினிமாஸ் நிறுவனம் விவேக்கின் கைக்கு வந்தது. விவேக் திருமணத்துக்கு ஜெயலலிதாவை வரவழைத்து அவரை தனது அரசியல் வாரிசாக அறிவித்து விடலாம் என்ற கணக்குப்போட்டார் இளவரசி. ஆனால் திருமணத்தை ஜெயலலிதா தவிர்த்துவிட்டார். இது இளவரசிக்கு கார்டனில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.
தற்போது, கொடநாடு எஸ்டேட், அங்குள்ள பங்களா என அனைத்தையும் இளவரசியின் இரண்டாவது மகள் ஷகீலா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜராஜன்.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலாவுக்கு சோப்புப் போட்டு ஆட்சியில் பங்கு பிடிக்கும் முயற்சியில் இளவரசி ஈடுபட்டார். சசிகலா தான் அடுத்த பொதுச் செயலாளர் என்று முடிவானதும் அவருடைய உடை, மேக்-அப், ஹேர் ஸ்டைல் என அனைத்தும் ஒரே நாளில் மாறியது. அதன் பின்னணியில் இருந்தது கிருஷ்ணப்பிரியா. முதலில் சசிகலா இதனை விரும்பவில்லையாம். ஆனால் அவரை வற்புறுத்தி “ உங்களுக்கு இது ரொம்ப நல்லா இருக்கும் அத்தை, பெரிய பதவிக்குப் போகும்போது பர்சனாலிட்டி தான் முக்கியம் என்று கிருஷ்ணப்பிரியாதான் சொல்லி சசிகலாவை கன்வின்ஸ் செய்திருக்கிறார்.

வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த சசிகலாவை மாடர்ன் சசிகலாவாக மாற்றிய பெருமை கிருஷ்ணப்பிரியாவையே சேரும். சசிகலாவை அதன்மூலம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கி மறைமுகமாக தனது சாணக்கிய தந்திரத்தால் வெற்றி கண்டார் கிருஷ்ணப்பிரியா. தற்போது கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற அவரது சாட்டையை சுழற்றியிருக்கிறார்  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக