வியாழன், 25 மே, 2017

சென்னை மெட்ரோ: 1.23 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விற்பனை!

சென்னை மெட்ரோ: 1.23 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விற்பனை!சென்னை மெட்ரோ ரயில் சேவையில், திருமங்கலம் - நேரு பூங்கா பாதாள ரயில் பாதையில் பயணிப்பதற்காக இதுவரையில், சுமார் 1.23 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், திருமங்கலம் - நேரு பூங்கா வழித்தடத்தில் பாதாள ரயில் சேவை மே 14ஆம் தேதி தொடங்கப்பட்டது. சேவைத் தொடங்கப்பட்டது முதல் இதுவரையில், 2,82,621 பேர் பயணித்துள்ளனர். பயணத்துக்கான அனுமதிக்குச் சுமார் 1,23,817 ஸ்மார்ட் கார்டுகள் பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. நேரு பூங்காவிலிருந்து பரங்கிமலைக்கான டிக்கெட் கட்டணம் 45 ரூபாயாகவும், நேரு பூங்கா முதல் ஏர்போர்ட் வரையில் டிக்கெட் கட்டணம் 54 ரூபாயாகவும் உள்ளது.

பள்ளி மாணவர்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்க சலுகை வழங்கும் வகையில் கூட்டமாக வரும் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகித தள்ளுபடியுடன் டிக்கெட்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்மார்ட் கார்டு ஒன்றின் விலை 150 ரூபாயாக உள்ளது. இதைப் பயன்படுத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம். ஆனால், இந்த ஸ்மார்ட் கார்டை வாங்கிய 30 நாள்களுக்குள் இதைப் பயன்படுத்தியாக வேண்டும்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக