சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா அவரது பிறந்தநாளான ஜூன் 3
கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கருணாநிதி உடல்நிலை குறித்து உருக்கமான
தகவலை துரைமுருகன் தனது முகநூளில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.''தொண்டைக்குழி''
வழியாக குழாயை உள்ளே விட்டு அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால் பேச
இயலவில்லை... கடந்த இரு தினங்களுக்கு முன் குழாயை எடுத்துவிட்டு
துவாரத்தையும் அடைத்து மருத்துவர்கள் பேச சொன்னார்கள். தலைவரிடம் உங்கள்
பெயர் என்ன எனக்கேட்க ? "என் பெயர் கருணாநிதி'' என்றார்.அடுத்ததாக
உங்களுக்கு யாரைப்பிடிக்கும் எனக்கேட்க? ''அறிஞர் அண்ணா'' என்றார். பின்னர்
என்னை யார் எனக்கேட்க ? "துரை'' என்றதும், என் கண்கள் கசிந்தன...
மீண்டு_வருவார்_தலைவர்... "வைரவிழா" நாயகர் கலைஞர். இவ்வாறு துரைமுருகன்
தெரிவித்துள்ளார்
தினமலர்
தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக