திங்கள், 29 மே, 2017

பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறிய பெண்ணுக்கு மரண தண்டனை கிராம பஞ்சாயத்தில் தீர்ப்பு

லாகூர், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் ரஜன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷுமைலா (வயது 19). இவருக்கு அவரது உறவினர் கலீல் அகமது என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் பின்னர் அவர், கலீல் அகமது தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்ததாக புகார் செய்தார். இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு சென்றது. பஞ்சாயத்து செய்த பெரியவர்கள் ஷுமைலாவின் புகாரை ஏற்கமறுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்தனர். உடனே ஷுமைலா அந்த கிராமத்தில் இருந்து தப்பி, போலீஸ் உதவியை நாடினார். ‘‘நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கலீல் அகமது துப்பாக்கி முனையில் என்னை கற்பழித்ததால் சத்தம்போட முடியவில்லை. ஆனால் பஞ்சாயத்தார் நான் விரும்பி தான் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி மரண தண்டனை வழங்கி உள்ளனர்’’ என்று போலீசில் புகார் செய்தார்.போலீசார் பஞ்சாயத்தார் மீது வழக்கு பதிவு செய்தனர். ஷுமைலாவை அரசு மகளிர் இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர்.தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக