திங்கள், 29 மே, 2017

BBC :இலங்கை 250 பேருக்கு மேல் மரணம் .. வெள்ளம் , மண்சரிவு ..இந்திய கடற்படை கப்பல்கள் விரைவு .

The Indian navy ships INS Kirsh and INS Shardul have already reached the Colombo port over the week-end with a third INS Jalashwa also said to arrive by Monday, the Foreign Ministry said in a statement. The first vessel carried inflatable boats, diving teams and a mobile medical team with supplies and was met by Foreign Minister Ravi Karunanayake at the port. Meanwhile the Chinese government also issuing a statement pledged US 2.2 million dollars disaster relief support for Sri Lanka.
இலங்கையில் மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 250-ஐ தாண்டியதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காணாமல் போனவர்களில் சிலர் சடலங்களாக அதாவது இரத்தினபுரி மாவட்டத்தில் 71 பேர் பலியாகியுள்ளனர்; 20 பேர் காணாமல் போயுள்ளனர் கேகாலை மாவட்டத்தில் 2 பேர் உயிழந்தும் மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளனர். மாத்தறை , காலி , மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர்; 27 பேர் காணாமல் போயுள்ளதாக அரசு போிடர் முகாமைத்துவ மையம் இறுதியாக வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனதாக கூறப்படும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது நிலச்சரிவுகளில் புதையுண்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் 4வது நாளாகவும் தொடர்கின்றன.


மீட்கப்பட்டு வருவதையடுத்தே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக கூறப்படுகின்றது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களிலும், இதுவரையில் 151 பலியாகியும், 111 பேர் காணாமல் போனதாகவும் தகவல்கள் பதிவாகியிருப்பதாக கூறுகின்றார் அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தின் உதவி இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி. கம்பகா மற்றும் களுத்துறை மாவட்டங்களை கொண்ட களுத்துறை மாவட்டத்தில் 47 மரணங்கள் உள்ளிட்ட 50 மரணங்களும் 62 பேர் காணாமல் போயுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் மனோ கணேசன் , பழனி திகாம்பரம் நேரில் பார்வையிட்டனர் 48 சத வீதமான மரணங்கள் சப்ரகமுவ மாகாணத்தில் பதிவாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக