திங்கள், 29 மே, 2017

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வில் நொய்டா மாணவி முதலிடம்

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 9-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ந்தேதி முடிவடைந்தது. இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 450 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று இணையதளத்தில் வெளியானது. ஒட்டுமொத்தமாக சி.பி.எஸ்.சி பிளஸ் டூ தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 82 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 83.05 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ தேர்வில் 99.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று ராக்‌ஷா கோபால் என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். நொய்டாவில் உள்ள அமிட்டி சர்வதேச பள்ளியில் படித்தவர் ஆவார். இரண்டாம் இடத்தை 99.4 சதவீத மதிப்பெண்களுடன் சண்டிகரில் உள்ள டி.ஏ.வி பள்ளி மாணவி பூமி சாவண்ட் பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை 99.2 சதவீத மதிப்பெண்களுடன் சண்டிகரிலுள்ள பவன் வித்யாலயா பள்ளியில் படித்த ஆதித்ய ஜெயின் பிடித்துள்ளார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக