சனி, 1 ஏப்ரல், 2017

உச்சநீதின்றம் உத்தரவு: தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை அவசர அவசரமாக இடமாற்றம் செய்யும் தமிழக அரசு!

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் நேற்றுடன் காலகேடு விதித்திருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் தமிழகத்தில் உள்ள மது கடைகளை மூட போதிய கால அவகாசம் தந்திருப்பதால் இனியும் அவகாசம் தர முடியாது என்றும் உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் திட்டவட்டமாக கூறியிருந்தது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களுக்கு செப். 30 வரை அவகாசம் தருவதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. தமிழக அரசின் தரப்பு தேசிய நெடுஞ்சாலைகளின் 3321 கடைகள் இருப்பதாக சொல்லி இருக்கும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற உடனடியாக உத்தரவை பிறப்பித்து இருக்கிறது தமிழக அரசு.
உச்சநீதிமன்ற உத்தரவிற்காக தமிழக அரசு உடனடியாக மதுக்கடைகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜீவா பாரதிநக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக