வெள்ளி, 21 ஏப்ரல், 2017

தீபாவின் கணவர் மாதவன் புதியகட்சி தொடங்கினார் ... இனி தமிழகத்தில் பாலாறு தேனாறு ...

புதிய கட்சி தொடங்கிய மாதவன்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்துவருகின்றன. குறிப்பாக அதிமுக சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என்று இரண்டு அணிகளாகப் பிரிந்தனர். அதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா' என்ற பேரவையை தொடங்கினார். தொடக்கத்தில் மாதவனும் தீபா பேரவையில் இருந்தார். பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து வெளியேறிய தீபாவின் கணவர் மாதவன், புதுக் கட்சி தொடங்கப்போகிறேன் என்று அறிவித்தார்.

இதையடுத்து, தீபாவுக்கும் மாதவனுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. அதனால் தீபா, மாதவனை வீட்டைவிட்டு வெளியேற்றினார்.
இந்த நிலையில், தீபாவின் கணவர் மாதவன், வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10 மணியளவில் ஜெயலலிதா சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின்னர் தனது புதிய கட்சியை தொடங்கினார். அப்போது, கட்சியின் கொடி மற்றும் பெயரை அவர் அறிமுகப்படுத்தினார்.
தனது புதிய கட்சியின் பெயரை (MJDMK) எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, திராவிட முன்னேற்றக் கழகம் என மாதவன் அறிவித்தார். கட்சியின் அறிமுக நிகழ்ச்சியில் மாதவனின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாதவன், ‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதிமுக-வினர் இரண்டாகப் பிரிந்து அடித்துக் கொள்கின்றனர். எனவே, என்னால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும். அதனால்தான் புதுக் கட்சி தொடங்குகிறேன்’ என்றார் மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக