வெள்ளி, 21 ஏப்ரல், 2017

அருணாச்சல பிரதேசத்தில் சீன எழுத்தில்...ஆறு இடங்களின் பெயர்களை ... இந்தியா கண்டனம் எழுதியது

பெயர் மாற்றம்: சீனாவுக்கு இந்தியா கண்டனம்!
அருணாச்சல பிரதேசத்தின் ஆறு இடங்களின் பெயர்களைச் சீன எழுத்தில் எழுதியது குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் மேற்கு கமிங் மாவட்டத்தில் உள்ள மோம்டிலாவுக்குச் சென்றதில் இருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா - சீனா உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டதாக வெளிப்படையாக அறிவித்தது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, அருணாச்சல பிரதேசம் தொடர்பாகச் சீனாவுடன் எந்தப் பிரச்னையும் இல்லை. அது, இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட பகுதி என்பதில் உறுதியாக உள்ளது. இந்தோ - சீனா போரின்போது சீனா கைப்பற்றிய பகுதிகள் தொடர்பாகத்தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.    இதை தடுக்க துப்பில்லை பெரிசா  தமிழ் எழுத்தை அழிக்க வந்துட்டாய்ங்க

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தின் ஐந்து நகரங்களின் பெயரை மாற்றி அறிவித்த சீனா, ‘இந்தியா -அருணாச்சல பிரதேசம் என்று கூறும் பகுதியானது எங்களைப் பொறுத்தவரை தெற்கு திபெத். அது எங்களுக்குச் சொந்தமான பகுதி. அதனால், சீன மொழியில் பெயரை வைக்கிறோம்' என்று காரணம் கூறுகிறது. இதுகுறித்து, சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லு காங் கூறுகையில், ''பிரச்னைக்குரிய பகுதிகளில் எங்களுக்கு உள்ள உரிமையை வெளிப்படுத்தும் நோக்கில் இந்தப் பெயர் மாற்றம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
இதன்படி புதிய பெயர்களில், எந்தப் பெயருக்கு, எந்தப் பெயர் என்ற அறிவிப்பை சீனா வெளியிடவில்லை. இதன்படி, வோஜாய்னிங்கிங், மிலா ரி, கயோடெங்கார்போ ரி, மெயின் காக்கா, பூமோ லா மற்றும் நாம்கபுப் ரி என்ற பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டத்தில் உள்ள சிறு நகரமான நம்கா சு-வுக்கு நாம்கபுப் ரி என்று பெயரிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே உள்ள பும்லா என்ற நகரத்துக்குப் பூமோ லா என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த இடத்தில்தான், இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான சந்திப்பு நடப்பது வழக்கம். இந்திய விமானப்படை ஓடுதளம் உள்ள மென்சுக்கா நகருக்கு மெயின்காக்கா என்று பெயரிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே நேற்று ஏப்ரல் 20ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது, “அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. எனவே மறுபெயரிடுதல் அல்லது புதிய பெயர்களைக் கண்டுபிடித்து வைப்பதால் சட்டவிரோத ஆக்ரமிப்பு சட்டபூர்வமாகி விடாது” என்று தெரிவித்தார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக