வெள்ளி, 21 ஏப்ரல், 2017

தனுஷ் வழக்கு தள்ளுபடி ... தங்கள் மகனாக அறிவிக்க கோரிய தம்பதிகளின் வழக்கை ...

பிரபல தமிழ் நடிகர் தனுஷின் பெற்றோர் தாங்கள்தான் என அறிவிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்று வந்தது.e>மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தனர். அதில், தற்போது பிரபலமாக உள்ள நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் கலைச்செல்வன் என்றும், 2002ஆம் ஆண்டில் பதினொன்றாம் வகுப்பை பாதியில் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்குச் சென்றுவிட்டதாகவும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
பிரபல நடிகரான பிறகு கலைச்செல்வன் தன் பெயரை தனுஷ் என மாற்றிக்கொண்டுவிட்டதாகவும், தங்களை ஒதுக்கிவைத்துவிட்டதாகவும் தாங்கள் மிகவும் சிரமப்படுவதால், பராமரிப்புத் தொகையாக மாதம் அறுபதாயிரம் ரூபாய் தர வேண்டுமென்றும் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.


கலைச்செல்வனின் பத்தாம் வகுப்புச் சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல்செய்த அந்தத் தம்பதி, அதிலிருக்கும் அங்க அடையாளங்களை தனுஷிடம் இருக்கிறதா என சோதிக்க வேண்டுமென்று கோரினர்.
இந்த வழக்கு மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.>இதில் பதில் அளித்த தனுஷ், தான் கிருஷ்ணமூர்த்தி - விஜயலட்சுமி தம்பதியின் மகன் என்றும், தன்னுடைய உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு என்றும், பிறகு தானும் தன் தந்தையும் பெயர்களை முறையே கஸ்தூரி ராஜா மற்றும் தனுஷ் என மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்துவந்த உயர்நீதிமன்றம் தனுஷ் நேரில் ஆஜராகி, தனது அங்க அடையாளங்களை மதுரை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்களின் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனக் கூறியது. அதன்படி தனுஷ் நேரில் ஆஜரானார்.

ஆனால், மேலூர் தம்பதியினர் அளித்த ஆவணங்களின்படி தனுஷின் உடலில் அடையாளங்கள் இல்லையென மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
இந்த நிலையில், இந்த வழக்கை ரத்துசெய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இருந்தபோதும், தாங்கள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக மேலூரைச் சேர்ந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். ஊடகங்களிடம் பேசிய மேலூர் தம்பதியின் வழக்கறிஞரான டைட்டஸ், "மரபணு சோதனை நடத்துவதற்கு நீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்" என்றார்.
“துள்ளுவதோ இளமை” படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மருமகனும்கூட. 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் தனுஷ், “பவர் பாண்டி” படத்தை இயக்கியுள்ளார்.  bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக