செவ்வாய், 25 ஏப்ரல், 2017

தெருவை காணோம் ! நடிகர் சங்கம் விழுங்கிவிட்டது? குடியிருப்பாளர்கள் போர்க்கொடி!

கிணற்றைக்காணோம்’’ என்ற வடிவேலு காமெடியைப்போல், ‘’தெருவைக்காணோம்’’ என்று நடிகர் சங்கம் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.நடிகர் சங்கம் அமைந்துள்ள ஹபிபுல்லா சாலையையும், அதற்கு பின்புறம் உள்ள பிரகாசம் சாலையையும் இணைக்கும் 33 அடி அகலம் கொண்ட தெருவை காணவில்லை என்று அப்பகுதி குடியிருப்பு நலச்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.;சென்னை மாநகராட்சி அப்பகுதியை வீட்டு மனைகளாக மாற்றியபோது தெளிவாக லே- அவுட் போட்டுள்ளது.  சென்னை மாநகராட்சியின் லே - அவுட்டில் 33 அடிக்கு நீண்ட தெரு இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.  நடிகர் சங்க இடத்தின் மூல பத்திரத்திலும் 14 கிரவுண்ட் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1970 களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் சங்கத்திற்கு வரும்போது, ரசிகர்கள் கூடியதால் தெருவின் இரு புறமும் பேரிகாட் எனும் தடுப்புகளை போட்டுள்ளனர்.  நாளடைவில் நடிகர் சங்கத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பி தெருவின் இரு பகுதிகளிலும் இரும்பு கேட்டை அமைத்துவிட்டனர்.   அதன் பிறகு அந்த தெரு நடிகர் சங்க பயன்பாட்டில் இருந்து வந்ததாக கூறுகின்றனர் அப்பகுதிவாசிகள்.

இன்றைய மதிப்பில் 30 கோடி ரூபாய் மதிப்புடைய அந்த இடத்திற்கு 2010ம் ஆண்டில், சரத்குமார் தலைவராக இருந்தபோது,  பட்டா பெற்றுள்ளனர்.  ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் தெருவையும் சேர்த்துதான், கட்டிடம் கட்டுவதற்கு   சிஎம்டிஏவிடம் அனுமதி  கேட்டுள்ளனர்.   அடிக்கல் நாட்டினாலும், சிஎம்டிஏவின் அனுமதி முழுமையாக இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று தகவல்.
 ;">நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு முன்பு, நீதிமன்றத்திற்கு சென்று  தெருவை மீட்போம் என்கின்றனர் அப்பகுதிவாசிகள்.

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக தற்போதுதான் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  அதற்குள், இப்படியொரு சிக்கல் வந்திருக்கிறது.  புதிய நிர்வாகம் இந்த சிக்கலை கவனத்துடன் தீர்த்துவிட்டால் கட்டிடம் கட்டிவிடலாம்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக