செவ்வாய், 25 ஏப்ரல், 2017

தினகரன் யாரென்றே எனக்கு தெரியாது : சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு பேட்டி

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி லஞ்சம் தருவதற்காக பேரம் பேசிய சுகேஷ் டெல்லி கோர்ட்டில் ஆஜர் ஆனார். சுகேஷிடம் 8 நாட்கள் விசாரணை செய்த பிறகு டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தியது போலீஸ். அப்போது நீதிமன்றம், சுகேஷுக்கு மேலும் 5 நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி நீதிமன்ற வளாகத்தில் போலீசார் சுகேஷை அழைத்துச்சென்றபோது, சுகேஷ் சந்திரசேகரிடம் தனியார் தொலைக்காட்சி நிருபர் பேசினார். அவரிடம் வழக்கு தொடர்பாக பேசிய சுகேஷ், ’’நான் எந்த குற்றமும் செய்யவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீதான பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் என்னை கைது செய்துள்ளனர். எனது கடந்த கால குற்ற பின்னணியின் அடிப்படையில் என்னை பலிகடா ஆக்கியுள்ளனர்’’ என்று தெரிவித்தார். தினகரனை நேரில் பார்த்திருக்கிறீர்களா? பேசியிருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, டிடிவி. தினகரன் யாரென்றே எனக்குத் தெரியாது’’ என்று தெரிவித்தார் . நீங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற கேள்விக்கு, ’நான் இந்தியன்’ என்று பதிலளித்தார் சுகேஷ் நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக