வெள்ளி, 21 ஏப்ரல், 2017

திருப்பதி அருகே லாரி மோதி 25 பேர் மரணம் .. பேருந்துக்கு நின்றவர்கள் மீது தறிகெட்டு மோதிய ..


பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதி 25 பேர் உயிரிழப்பு! ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சித்தூர் மாவட்டம் ஏர்பேடு கிராமத்தில் சாலையோர கடைக்குள் லாரி புகுந்தது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மற்றும் இரசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 25 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பலர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சித்தூர்: திருப்பதி அருகே ஏர்பேடு பகுதியில் உள்ள கடைகளுக்குள் லாரி புகுந்ததில் பஸ்சுக்காக காத்திருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஏர்பேடு பகுதியிலுள்ள கடைகளை உடைத்தபடி, பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியுள்ளது. அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தின் எதிரே ஒரு போராட்டம் நடைபெற்றுள்ளது. அந்த போராட்டக்காரர்கள் மீதும் லாரி மோதியுள்ளது. இதனால் அந்த இடமே ரத்த வெள்ளமாக மாறியது. இதனிடையே லாரி மோதி, மின்சார கம்பம் சரிந்து மின்சாரம் பாய்ந்தும் சிலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காய்கறி விற்றவர்கள், பஸ்சுக்கு காத்திருந்தவர்கள், போராட்டம் நடத்தியவர்கள் என மூன்று தரப்பட்ட மக்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இவ்வாறு மொத்தம் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சுமார் 20 பேர் படு காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக