புதன், 26 ஏப்ரல், 2017

சீனா 29 முஸ்லிம் பெயர்களை தடைசெய்தது ... தாடிக்கும் தடை ,,


29   விதமான முஸ்லிம் பெயர்களுக்குத் தடை! . சீனாவில் உள்ள மாகாணங்களில் சின்ஜியாங்கில் அதிக அளவிலான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்னதாக, அவர்களுக்கு தொழுகை மேற்கொள்வது முதல் ஆடை வரை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது சீன அரசு. இந்நிலையில் அங்கு பிறக்கும் முஸ்லிம் மக்களின் வாரிசுகளுக்கு குரான், முஸ்லிம், மெக்கா, ஜிகாத், இமாம், சதாம், ஹஜ் மற்றும் மதினா உள்ளிட்ட 12 விதமான பெயர்கள் வைக்க, புதிதாக தடை விதித்துள்ளது சீன அரசு. அவ்வாறு 12 விதமான பெயர்கள் வைத்திருக்கின்ற, இஸ்லாமிய குழந்தைகளுக்குச் சீன பள்ளிகளில் படிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் சீனாவில் இருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்தவர்களிடம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக