புதன், 26 ஏப்ரல், 2017

தமிழிசை : விவசாயிகள் போராட்டம் சுயநலத்துடன் நடத்தப்பட்ட வெற்று போராட்டம்!

எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டம் வெற்றிப் போராட்டம் அல்ல; அது வெற்றுப் போராட்டம்’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 25ஆம் தேதி (நேற்று) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், “விவசாயிகளுக்காக நடைபெற்ற இந்தப் போராட்டம் வெற்றிப் போராட்டம் அல்ல; வெறும் வெற்றுப் போராட்டம்தான். சுயநலத்துடன் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. விவசாயிகளின் நலன் என்ற பெயரில் கூட்டணி பலம் பெற வேண்டுமென்பதற்காக முழு அடைப்பு நடைபெற்றுள்ளது. போராட்டத்தில் வணிக நிறுவனங்கள் மிரட்டப்பட்டு முழு அடைப்பு நடைபெற்றுள்ளது. தமிழக விவசாயிகளுக்காகப் போராடும் திமுக, கர்நாடகாவில் தண்ணீர் திறக்கக்கோரி தன்னுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸிடம் ஏன் வலியுறுத்தவில்லை? மேலும் எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதைச் செய்துகாட்டிய தமிழக காவல்துறைக்குப் பாராட்டுகள்” என்று தெரிவித்தார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக