வெள்ளி, 21 ஏப்ரல், 2017

சத்யராஜ் படத்துக்கு கர்நாடகத்தில் தடை என்றால், ரஜினியின் எந்திரன் 2.0 படத்திற்கு இங்கு?

சத்யராஜ் முன்பு எப்பொழுதோ கன்னடர்களை காவேரி பிரச்சினையில் திட்டிவிட்டாராம், யார்தான் திட்டவில்லை? உச்சநீதிமன்றம் வரை திட்டத்தான் செய்தது
அதனால் இப்பொழுது சத்யராஜ் மன்னிப்பு கேட்டால்தான், பாகுபலியினை கன்னடத்தில் வெளியிட அனுமதிப்பார்களாம், இதை வலியுறுத்தி போராட்டம் வேறு அந்த ஊர் சீமான் பால் தாக்கரே நடத்தபோகின்றாராம்
அவருக்கும் வேலை இல்லை, அவருடன் இருக்கும் கும்பலுக்கும் "வேலை" இல்லை, இப்படியான சந்தர்ப்பங்களில் மட்டும் வேலை பார்க்கின்றார்கள்
நதிகளும், கலைகளும் எல்லைகள் தாண்டியவை எல்லா மக்களுக்கும் பொதுவான விஷயம்
அப்படி சத்தியராஜ் மன்னிப்பு கேட்கவேண்டுமென்றால், நாம் கேட்டுகொள்ளலாம்
சரோஜாதேவியினை தமிழகத்தில் அனுமதித்தற்காகவும், ரஜினி முதல் மோகன், முரளி, பிரகாஷ்ராஜ் என சகலரையும் இங்கு அனுமதித்தற்காகவும் மன்னிப்பு கேட்கின்றோம்

இந்த ரஜினி எனும் கன்னடனை இங்கு சூப்பர்ஸ்டாராக ஆக்கி வைத்த பாவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கின்றோம்
சந்தியா எனும் கன்ன்டபெண்ணை அனுமதித்து, அதன் பின் அவர் மகளான ஜெயலலிதா எனும் பெண்ணை அனுமதித்து அவரை முதல்வரும் ஆக்கிய பாவத்திற்காக தெண்டனிட்டு மன்னிப்பு கேட்கின்றோம்...
முன்பு கன்னடன் ராஜகுமாருக்கு ஆபத்து என்றவுடன் குதிதோடிய மிஸ்டர் ரஜினிகாந்த் என்பவரை இப்பொழுது காணவில்லை, பாகுபலி கன்ன்டத்தில் என்ன ஆனால் அவருக்கென்ன?
மிஸ்டர் வாட்டாள் நாகராஜ், சத்தியராஜ் கன்னடருக்கு கன்னடம் தெரிவித்த அந்த போராட்டத்தில் , சத்தியராஜூக்கு அருகில் இருந்தவரும் அடுத்து கண்டித்து பேசியவர் யார்? அது ரஜினிகாந்த்
உங்களுக்கு மானமும், அறிவும்,கன்னட வெறியும் இருப்பது உண்மையென்றால் பாகுபலியினை தொடர்ந்து அந்த எந்திரன் 2.0 படத்திற்கும் தடைவிதியுங்கள்
முடியுமா?
அப்படி செய்தால் உங்களுக்கு இருப்பது கன்னட வெறி என்பது நிரூபணமாகும், இல்லாவிட்டால் இது வெறும் நாடகமாகும்
சத்யராஜ் படத்திற்கு கன்னடத்தில் தடை என்றால், ரஜினியின் எந்திரன் 2.0 படத்திற்கு இங்கு தடை என குரல் எழும்பினால் என்ன செய்வீர்கள் வாட்டாள் நாகராஜ்?
அங்கு சத்யராஜ் படம் ஓடினால் இங்கு ரஜினி படம் ஓடும், அங்கு ஓடாவிட்டால் இங்கும் ஓடாது
இது "கன்னட பைங்கிளி" சரோஜாதேவி மீது சத்தியம்.....
(அனுஷ்கா மீது சத்தியம் செய்ய இன்னும் காலம் இருக்கின்றது...)   முகநூல் பதிவு  ஸ்டான்லி ராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக