ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

கொடநாடு பங்களாவில் 200 கோடிக்காக ? ஆவணங்களுக்காக ?

Trying to loot 200 crores in kodanad estate ?ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை: கொடநாடு பங்களாவில் ரூ200 கோடி ரூபாய் இருந்ததாகவும், அதை கொள்ளையடிக்க முயற்சி செய்த போது காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 23ம் தேதி நள்ளிரவில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயம் அடைந்தார். இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரான கனகராஜ் என்பவர் இன்று காலை சேலம் அருகே எடப்பாடியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கனகராஜின் நெருங்கிய நண்பரான சயான் மற்றொரு சாலை விபத்தில் காயமடைந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் சயானுடன் காரில் பயணித்த அவரது மனைவி, மகள் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பங்களா காவலாளி கொலை வழக்கு தொடர்பாக 11 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேரள மாநிலம் திருச்சூரில் திபு, உதயன், சதீஷன், சந்தோஷ் ஆகிய 4 கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மலப்புரத்தில் ஜித்தன் ராய், அர்ஷத் ஆகிய இருவரையும் காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவர்களை கோவை அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர். கொலை தொடர்பாக குட்டி, மனோஜ்‌ உள்பட 5 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பிடிபட்டிருக்கும் 6 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொடநாடு பங்களாவில் 200 கோடி ரூபாய் இருந்ததை அறிந்து, கொள்ளையடிக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்காக, பங்களாவிற்கு அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகவும், கொள்ளையடிக்க முயற்சித்த பங்களாவிற்குள் நுழைந்த போது தான் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டதாகவும், காவல்துறையினரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் கனகராஜூக்கும், சயானுக்கும் இடையே, கோவையை சேர்ந்த‌ அதிமுக முக்கியப் புள்ளி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கொடநாடு காவலாளி கொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக