பிறந்தநாள் (ஏப்ரல் 29) ..பாவேந்தருக்கு நினைவேந்தல்
இந்தி
என்பது இந்தியாவின் தேசிய மொழி அல்ல. அது மத்திய அரசின் ஆட்சிமொழி. இணை
ஆட்சிமொழியாக ஆங்கிலம் நீடிக்கிறது என்கிற உண்மையை தமிழர்கள் மனதில் பதிய
வைத்து, இந்தி மொழியை படிக்க விடாமல் செய்துவிட்டார்களே என்ற ‘குற்ற
உணர்ச்சி’யையும் தாழ்வு மனப்பான்மையையும் முதலில் போக்க வேண்டும்.
இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்றால், தமிழ் என்பது என்ன மொழி?
இந்தியாவில் வாழும் தமிழர்களாகிய நாங்கள் யார் என்ற கேள்வியை
டெல்லிவாலாக்களிடம் கேட்கும் துணிவை உருவாக்க வேண்டும். அரசியல் சட்டத்தின்
எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ்
உள்ளிட்ட இந்திய மொழிகளை மத்திய ஆட்சிமொழியாக்கும்படி முழங்கிடச் செய்ய
வேண்டும். தொடர்பு மொழியாக உள்ள ஆங்கிலத்தையும் கடந்து காலத்திற்கேற்ற
வகையில் செம்மொழித் தமிழின் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும். இதுவே
‘தமிழியக்கம்’ படைத்த கவிஞரின் பிறந்தநாளுக்கு செய்யும் சிறப்பு.
எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி?
எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்?
என்று அறைகூவல் விடுத்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் (ஏப்ரல் 29)
தி.பி.2048 சித்திரை 16< முகநூல் பதிவு
எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்?
என்று அறைகூவல் விடுத்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் (ஏப்ரல் 29)
தி.பி.2048 சித்திரை 16< முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக