வியாழன், 30 மார்ச், 2017

மெரீனாவில் திடீரென்று இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக ... ஹைட்ரோ காபனுக்கு எதிராக?

சென்னை: மெரினா கடற்கரையில் குழுக்களாக மாணவர்கள் அடுத்தடுத்து திரண்டு வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென விவேகானந்தர் இல்லம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இளைஞர்கள் அணி அணியாக மெரினாவுக்கு திரண்டு வருகின்றனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர். tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக