ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

திவாகரனும் மகனும் ஆளுனரை ஒரு வாரத்திற்கு முன்பு ஏன் சந்தித்தார்கள்? ஆளுநர் foul play ?

ஆளுநர் பதவியேற்க அழைப்பு விடுக்கும்முன்பு, அவரை திவாகரனும், அவரது மகனும் சென்று தனிப்பட்ட முறையில் சந்தித்து இருக்கின்றனர் ..இது குறித்து எந்த ஊடகத்திலும் பெரிய அளவில் செய்தி வந்ததாக தெரியவில்லை ....தொடர்ந்து பிரேக்கிங் நியூஸ் போட்டபோதும்..இந்த செய்தி தவிர்க்கபட்ட காரணம் என்ன??
அரசியலுக்கும், அதிமுகவுக்கும் உறுப்பினராக கூட சம்பந்தம் இல்லாத இந்த இருவரை சந்தித்த சில மணிகளில் ஆட்சி அமைக்க எடப்பாடி அழைக்கபட்டது எப்படி ...
பிளான் A வாக பன்னீர்செல்வதை வைத்திருந்த பாஜக, பிளான் B யாக சுனா சாமியை சசிகலாவுடன் தொடர்பில் வைத்து இருந்தது பல சந்தேகங்களை எழுப்புகிறது ...இன்று சட்டசபை நிகழ்வு குறித்து ஆளுநர் இன்னமும் மவுனம் காப்பது ஏன் ...இன்று சட்டசபையில் மிச்சர் பன்னீர்செல்வம் மவுனம் காத்தது ஏன்..
பிளான் A வை செயல்படுத்த முடியாத பாஜக, பிளான் B யை வெற்றிகரமாக செயல்படுத்தி கொண்டது என்றே எனக்கு தோன்றுகிறது ...ஆளுநரால்,தமிழகத்தை காக்க இயலவில்லை என கூறி பாஜக ஆட்கள் அமைதி காக்கும் செயல் இன்னமும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது ..
சில தினங்களில் இந்த உண்மைகள் வெளிவந்தே தீரும் ..  முகநூல் பதிவு   நிக்கலஸ் கோபர்நிகஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக