ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

அடிமைகள் : திமுகவை தாக்கி தினம் தினம் ஏதாவது ... கூலி கொடுக்கிற எசமானுக்கு விசுவாசம்

RSS ஆட்கள் போலீஸ் உடையணிந்து வந்து மீனவ குப்பங்களை அடித்து நொறுக்கினால் அது பன்னீர்செல்வம்/சசிகலா கூட்டாட்சி. போலீஸே மாறுவேடத்தில் வேறு போலீசாக Marshall ஆக வந்து திமுகவினரை துவைத்தெடுத்தால் அது எடப்பாடி/சசிகலா கூட்டாட்சி.. எவ்வாறாகினும் சசிகலா என்ற மூன்றாம் தர கிரிமினலின் ஆட்சி நேராகவோ மறைமுகமாகவோ நடந்துகொண்டே தான் இருக்கிறது. அடிமைகளுக்கு சசிகலா குறித்த கவலை இல்லை. திமுகவை திட்ட வேண்டும்.ஸ்டாலினை சிறுமைப்படுத்தும் பதிவுகள் போடவேண்டியது. சரி இந்த மொன்னைகள் சொல்வதுபோல் அமைதியாய் இருந்தால் "திமுக ஏன் மிக்சர் சாப்பிடுகிறது??" என்று நேற்றிரவு google படித்து அரசியல் கற்ற அம்பிகள் அபிலாஷையுடன் விவரனை செய்ய வேண்டியது. ஆக இவர்களுக்கு சசிகலாவோ, ஜெயாவோ, தினகரனோ, செரினாவோ நடராஜனோ பிரச்சனை இல்லை.திமுக வந்துவிடக் கூடாது.அவ்வளவு தான். அதிமுக இப்படி யோசிப்பதை விட அல்லக்கை கட்சிகள் எல்லாம் தான் இப்படி அதிகம் யோசிக்கின்றன. இது இவர்கள் ரத்தத்தில் ஊறியது. செருப்பை கவ்வக்கொடுத்து புட்டத்தில் சாட்டையால் விளாசும் சசி, ஜெயா போன்ற sadistகளிடம் அவமாணப் படுவதில் இருக்கும் அடிமை மோகம்.சுயமரியாதையற்ற கோட்டித்தனம். மற்றபடி தமிழன், தமிழ்நாடு என்றெல்லாம் இவர்களுக்கு அக்கறையில்லை. பொறாமை அடிமைகளின் குணம்  முகநூல் பதிவு Umamaheshvaran Panneerselvam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக