ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

சட்டசபை மாண்பு வகுப்பெடுக்கும் அறிவு கொழுந்துகள் ... அந்த 75 நாட்கள்.. கால்கள் ..அப்புறம் .. கூவத்தூர் . மூச் விடமாட்டாய்ங்க !

சொன்ன மாதிரியே சட்டசபை மாண்பு, சட்டசபை கவுரவம்ன்னு ஆரம்பிச்சிட்டானுக... உச்சகட்டமாக இவர்கள் கூறும் சட்டசபை மாண்புகுலைவு என்னவென்றால்... சபாநாயகர் இருக்கையில், திமுக உறுப்பினர்கள் கு க செல்வம் மற்றும் புரசைவாக்கம் ரங்கநாதன் சென்று அமர்ந்தனர் என்பதே .. சற்று பின்னோக்கி சென்று தமிழகத்தில் நடந்த சட்டமன்ற மாண்பு குறித்து பார்க்கலாம் ...1991 ல் தற்போதைய A1 அக்கியூஸ்ட் புரட்சி தலைவி பதவியேற்கிறார் ..சில மாதங்கள் கடக்கிறது ..சட்டமன்றம் கூடுகிறது ..A1, தன்னோடு A2 வையும் அழைத்து கொண்டு சட்டசபைக்கு வருகிறார்...
நேராக சென்று தன்னுடைய உயிரில் கலந்த தோழியை( உயிரை எடுத்த என்றும் படிக்கலாம்)...துணை சபாநாயகர் இருக்கையில் அமர்த்துகிறார்...தானும் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர்கிறார் ...அதிமுக அடிமைகள் அனைவரும் கை தட்டி ஆர்பரிக்கின்றனர்..
மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட MLA க்கள் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்ததை விமர்சிக்கும் இன்றைய அரசியல் கட்சிகள், குறிப்பாக, கம்னியூஸ்ட்கள் அன்றும் சட்டசபைக்கே சம்பந்தம் இல்லாத அக்கியூஸ்ட் A2 துணை சபாநாயகர் நாற்காலியில் சென்று அமர்ந்ததை வேற்று வேடிக்கை மட்டுமே பார்த்தனர்...
ஆதாரம் வேண்டுவோர், இது குறித்து விகடன் தனது சமீபத்திய கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை பார்த்துகொள்ளலாம் .  முகநூல் பதிவு நிகோலஸ் கோபர்நிகஸ்   https://goo.gl/xQMlNL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக