புதன், 1 பிப்ரவரி, 2017

மொபைல்போன், எல்.இ.டி பல்ப்,முந்திரி,பீடி விலை உயருகின்றன!

■ சிகரெட், பீடி, புகையிலை பொருட்கள் விலை உயருகிறது!
■ தயாரிக்கப்படாத புகையிலை மீதான கலால் வரி, 4.2 சதவீதத்தில் இருந்து, 8.3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
■ பான் மசாலா மீதான கலால் வரி 6 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
■ பில்டர் ( பஞ்சு வச்ச சிகரெட்) மற்றும் சாதா சிகரெட்டுகள் மீதான கலால் வரி 12.5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
■ உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்கள், எல்.இ.டி. பல்புகள் மீதான விலை உயருகின்றன. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்கியூட் போர்டுகள், உதிரி பாகங்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த விளைவு ஏற்படும்.
■  வாயில் மெள்ளும் புகையிலை, பில்டர் கைனி, ஜர்தா வாசனை உடைய புகையிலை மீதான வரி 6 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
■  கையில் சுற்றப்படும் பீடிகளுக்கு கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆயிரம் பீடிகளுக்கு 21 ரூபாய் கலால் வரி விதிக்கப்பட்ட நிலையில், அதனை 28 ரூபாயாக உயர்த்தியுள்ளனர்.

■  Populated Printed Circuit Boards மீது புதிதாக 2 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மொபைல் தயாரிப்புகளின் விலை அதிகமாகிறது. இதற்கு முன்பு இந்த பொருளுக்கு வரிகள் எதுவும் இல்லை.
■ எல்.இ.டி. பல்புகள் செய்ய பயன்படும் உதிரி பாகங்கள் மீதான சுங்கவரி 5 சதவீதமும், சி.வி.டி எனப்படும் மானியங்களை ஈடுசெய்யும் வரி 6 சதவீதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த இரண்டு வரிகளும் இல்லை.
■  இறக்குமதி செய்யப்படும் முந்திரி பருப்புகள் மீதான சுங்க வரி 30 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
■ இறக்குமதி செய்யப்படும் வெள்ளிப் பதக்கங்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் உள்ளூரில் 50 சதவீதம் வெள்ளி கலந்து செய்யப்படும் பொருட்களுக்கு 12.5 சதவீதம் சி.வி.டி எனப்படும் மானிய இழப்பை சரிசெய்யும் வரி விதிக்கப்படுகிறது. இதற்கு முன்பு இப்படி ஒரு வரி இல்லை.
பட்ஜெட்டால் விலை குறைந்தவை:

■ IRCTC மூலம் புக்கிங் செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு சர்வீஸ் சார்ஜ் நீக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு ரயில் டிக்கெட் கட்டணம் சற்று குறையும்.
■ சோலார் மின்தகடு கண்ணாடிகள், எரிபொருளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறை, காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு ஏற்ப வகையில் அதற்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக