புதன், 1 பிப்ரவரி, 2017

பட்ஜெட் : வரி - வருமானம் சார்ந்த அறிவிப்புகள்!



minnambalam.com :இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வரி மற்றும் வருமானம் சார்ந்த அறிவிப்புகள் பின்வருமாறு:
நாட்டில் முறையாக வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
பணப்புழக்கம் அதிகம் இருப்பதால்தான், எளிதாக வரி ஏய்ப்பு செய்ய முடிகிறது.
5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட 76 லட்சம் பேரில் 56 லட்சம் பேர் மாத ஊதியம் வாங்குபவர்கள்.
2015-16 நிதியாண்டில் 3.7 கோடி பேர் வருமான வரியை தாக்கல் செய்துள்ளனர்.
ஆண்டு வர்த்தகம் 50 கோடிக்கும் கீழாக உள்ள நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதமாக குறைப்பு.
தனி நபர் வருமான வரி தாக்கல் செய்யும் படிவம், இனி ஒரு பக்கம்தான் இருக்கும்.
தனி நபர் வருமானம் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை இருப்பவர்களுக்கு 5 சதவிகிதம் மட்டுமே வருமான வரி.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை.
ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் வருமான வரியில் எந்தவித மாற்றமும் இல்லை.
ஆண்டு வருமானம் ஒரு கோடி அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு கூடுதலாக 15 சதவிகிதம் வரிப்பிடித்தம் செய்யப்படும்.
ஆண்டு வருமானம் 50 லட்சத்திலிருந்து ஒரு லட்சம் வரை கொண்டிருப்பவர்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
ஜி.எஸ்.டி கவுன்சில் தனது பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது. ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தினால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி வசூல் அதிகரிக்கும்.
வெளிப்படையான வங்கி டெபாசிட் விபரங்கள், எதிர்காலத்தில் வரிவசூலை எளிதாக்க உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக