வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

கைதிகள் புகார் ! சுதாகரன் : ஐம் க்ரீம் ஸௌம் ... சிறையில் சுதாகரன் மந்திர உச்சாடனம் ...

சுதாகரனை கண்டு அஞ்சும் சக கைதிகள்சிறையில் சுதாகரன் மந்திரவாதியைப் போல் இரவு நீண்ட நேரம் வரை மந்திரங்களை ஓதி பூஜை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. By: Kalai Mathi
பெங்களூரு:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன் இரவு நேரங்களில் உடல் முழுவதும் திருநீரை பூசிக்கொண்டு மந்திரங்களை ஓதுவதாக கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்துள்ள சக கைதிகள் தங்களை வேறு சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து இதையடுத்து கடந்த 16ஆம் 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவும் இளவரசியும் ஒன்றாக சரணடைந்த நிலையில் சுதாகரன் தனியாகவும் தாமதமாகவும் வந்து சரணடைந்தார். இரு மாநில வனத்துறையினர் மோதல்-வீடியோ 01:32 இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி-வீடியோ

தாகரனுக்கு சலுகைகள் மறுப்பு அவர்களில் சசிகலாவுக்கும் இளவரசிக்கும் சிறை அறையில் பல்வேறு சலுகையில் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் சுதாகரனுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இரவு நேரங்களில் மந்திரங்களை ஓதி பூஜை இந்நிலையில் சிறையில் உள்ள சுதாகரன் எப்போதும் உடல் முழுவதும் திருநீரை பூசிக் கொண்டு வலம் வருவதாக கூறப்படுகிறது.
இரவு நேரங்களில் நீண்ட நேரம் சிறை அறையில் மந்திரங்களை ஓதி அவர் பூஜை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுதாகரனை கண்டு அஞ்சும் சக கைதிகள் இதனால் சக கைதிகள் இரவு நேரங்களில் தூங்க முடியவீல்லை புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
சுதாகரனிடம் பேசவும் கைதிகள் பயப்படுவதாகவும் கூறப்படுகிறது. வேறு சிறைக்கு மாற்ற கோரிக்கை மந்திரவாதியைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு அவர் பூஜை செய்வதால் அவரைப் பார்த்து சக கைதிகள் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
இதனால் சுதாகரனை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என சக கைதிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள tamiloneindea

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக