வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

தமிழக அரசை முழுசா விற்ற ஆளுநர் வித்தியா சாகர் ராவ் ...

அந்த வார இதழ் அதிகாரபூர்வமாக அந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதற்கு முன்பே வாட்ஸ் ஆப் குழுக்களில் கவர்னர் பற்றிய செய்திகள் வந்த போது  நம்ப இயலவில்லை. கவர்னர் அவர்களது அண்ணன்கள் மூலம் அமெரிக்க வங்கிகளில் ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டே எடப்பாடியை ஆட்சி அமைக்க அழைத்தார் என்றார்கள் சமூகப் போராளிகள்t; அது உண்மை என்கிறது அந்த வார இதழ். 1.ஜெ., இறந்த போதே அடுத்து என்னெல்லாம் நடக்கும் என்பதை கவர்னர் யூகித்துவிட்டார். சசிகலா தரப்பின் பிரமாண்டமான சொத்து மதிப்பும் கவர்னர் அறிந்து கொண்டார்.
2.சசிகலா தரப்பில் ஆட்சி அமைக்க போராடுவது, அதற்கு டெல்லி முட்டுக் கட்டை போடுவது, அதற்கான காரணங்களை அறிந்து கொள்கிறார். இங்கு தான் விளையாட வேண்டும் என்று கவர்னர் மூளை வேலை செய்யத் துவங்குகிறது. தான் மிகக் கறார் கவர்னர் என்பது போல  முறுக்கிக் கொள்கிறார். சசி தரப்பு பதறுவதை ரசிக்கிறார். மும்பை பறந்து விடுகிறார்.
3.டெல்லி பன்னீரை களம் இறக்குகிறது. பன்னீர் அம்மா சமாதியில் தனது நாடகத்தை துவங்குகிறார்.அதிமுக கடும் நெருக்கடிக்கு ஆளாகிறது.
4.சசி தரப்பு தனது ஆதரவு உறுப்பினர்களை கூவத்தூரில் சிறை வைக்கிறது. இதை மும்பையில் இருந்து கொண்டு ரசிக்கிறார். காய் நகர்த்தல் ஆரம்பமாகிறது.
5.டெல்லி ஒரு கணக்கு போடுகிறது பன்னீர் திடீர் புனிதனாகிறார். மக்கள் செல்வாக்கு அவருக்கு குவிகிறது. அவரை வைத்து சசிகலாவிற்கு செக் வைக்கலாம் என்று கணக்கு போட்டு காத்திருக்கிறது.
6.ஆனால் கூவத்தூரில் உறுப்பினர்களை, சரக்காலும், கருணாஸின் துணை நடிகைகள் மூலமும், பல கோடிகள் பணம் தருவதாகவும் அவர்களுக்கு ஆசைகாட்டி தக்க வைக்கிறது. இந்த மேட்டரும் கவர்னர் மும்பையில் அமர்ந்து சிரித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
7.கவர்னர் சென்னை வராமல் போக்கு காட்டுகிறார்.மேலும்  பதறுகிறது சசிகலா டீம். அவரை எப்படி அணுகுவது என்று யோசிக்கிறது.
8.சசிதரப்பு இங்குதான் கவர்னரை குளிப்பாட்டி விடுவது என முடிவு செய்து மும்பை சோர்ஸ்சை நாடுகிறது. பேச்சு வார்த்தை ஆரம்பிக்கிறது. ரொம்ப பிகு பண்ணுகிறார். பல ஆயிரம் கோடிகள் பேரம்  துவங்குகிறது.
9.டெல்லி கவர்னரிடம் அறிக்கை கேட்க பன்னீருக்கு பெரிய செல்வாக்கு இல்லை நாம் எடப்பாடி மூலம் நிறைய சாதிக்கலாம் என்று ரிப்போர்ட் அனுப்புகிறார். டெல்லி யோசிக்கிறது.
10.சென்னை வாங்க பேசிக்கலாம் என்கிறார்கள் சசி தரப்பினர். சென்னை வருகிறார் கவர்னர். மும்பை அண்ணன்கள் மூலம் அமெரிக்க வங்கிகளில், ஒரு பெரும்  தொகை கைமாறுகிறது.
11.திவாகரன், விவேக் கவர்னரை சந்திக்கிறார்கள். அனைத்தும் ஒகே. எடப்பாடியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்கிறார். கடைசியாக கூவத்தூர் உறுப்பினர்களை தினகரன் சந்தித்து பல வாக்குறுதிகள் வழங்குகிறார். சசிகலா கூவத்தூரில் முகாமிடுகிறார். அவரும் வாக்குறுதிகள் கொடுக்கிறார்.
12.ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. பல வன்முறைகள் நடத்தப் பட்டு எடப்பாடி ஆட்சி அமைக்கிறார். சசிகலா சிறை செல்கிறார்.
இதில் ஏமாளிகள் ஓட்டுப்போட்ட நாம்,  சரிதானா நண்பர்களே..? லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக