வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

அமெரிக்காவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இந்தியர் சுட்டுக்கொலை, குற்றவாளி கைது

கன்சாஸ், ஐதாராபாத்தைச்சேர்ந்த மென்பொறியாளரான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவர் கன்சாஸ் பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றிற்கு சென்றிருந்த போது அங்கே வந்த 51 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென ஸ்ரீனிவாசை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று கத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அலோக் என்ற மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் ஆடம் புரிண்டன் என்றும், அவர் கடற்படையில் பணிபுரிபவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்dளது. அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக