வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்! மூன்று அணிகளும் கடும் போட்டி ..


உ.பி., தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் ஓட்டு சதவீத மாற்றம் வெற்றியை பாதிக்குமா? லக்னோ:ஓட்டு சதவீதத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும், கட்சிகளின் தேர்தல் வெற்றியை பெரிய அளவில் பாதிக்கும் நிலையில், உ.பி., தேர்தல் களம் அமைந்துள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமை யிலான ஆட்சி நடக்கும், உ.பி.,யில், 403 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து வருகிறது. ஏழு கட்டங்களாக நடக்க வுள்ள தேர்தலில், இரண்டு கட்டம் முடிந்துள்ளது. உ.பி., சட்டசபைக்கு, கடந்த இரு முறை நடந்த, தேர்தல் புள்ளி விபரங்களை ஆய்வு செய்யும் போது, ஓட்டு சதவீதத்தில் ஏற்படும் சிறிய மாற்றமும், கட்சிகளின் வெற்றி வாய்ப்பில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.தற்போது, ஆளும் சமாஜ்வாதி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும், பா.ஜ.,வும் தனியாக தேர்தலை சந்திக்கின்றன.கடந்த, 2007 சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ், 30 சதவீத ஓட்டுகளை பெற்று ஆட்சி அமைத்தது.


சமாஜ்வாதி, 26 சதவீதம், பா.ஜ., 17 சதவீதம் மற்றும் காங்., 8.5 சதவீத ஓட்டுகளை பெற்றன. அதே நேரத்தில், 2012ல், சமாஜ்வாதி யின் ஓட்டு சதவீதம், 3 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. ஆனால், முந்தைய தேர்தலில், 97 இடங்களை வென்ற அந்த கட்சி, 224 தொகுதிகளில் வென்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

அதே நேரத்தில், பகுஜன் சமாஜ் ஓட்டு, 4.5 சதவீதம் மட்டுமே குறைந்தது. ஆனால், அதன் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை,
206ல் இருந்து, 80 ஆக குறைந்தது.கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், மொத்தம் உள்ள, 80 தொகுதிகளில், 27.42 சதவீத ஓட்டுகளுடன், பகுஜன் சமாஜ், 20 தொகுதிகளில் வென்றது.

காங்., 18.25 சதவீத ஓட்டுகளுடன், 21 தொகுதிகளி லும்; பா.ஜ., 17.5 சதவீத ஓட்டுகளுடன், 10 தொகுதி களிலும் வென்றன. அந்த தேர்தலில், சமாஜ்வாதி, 23.26 சதவீத ஓட்டுகளுடன், 23 தொகுதிகளை கைப்பற்றியது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும் மோடி அலை வீசிய போது, உ.பி., யில்,பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், 42.6 சதவீதமாக உயர்ந்து, 71 தொகுதிகளில் வென்றது. அதாவது, மொத்தமுள்ள லோக்சபா தொகுதிகளில், 90 சதவீத இடங்கள், பா.ஜ.,வுக்கு கிடைத்தன.

202 தொகுதிகளில்

லோக்சபா தேர்தலில், 403 சட்டசபை தொகுதி வாரி யாக, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதத்தை பார்கும் போது, 80 சதவீத தொகுதிகளில், மற்ற கட்சிகளை விட, அதிக ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு கிடைத்தன.
தற்போதைய நிலையில், கடந்த லோக்சபா தேர்த லில் பெற்றதை விட, சட்ட சபை தொகுதி வாரியாக, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், 10 சதவீதம் குறைந்தா லும், தனிப் பெரும்பான்மைக்கு தேவையான, 202 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற முடியும் என, தேர்தல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால், இந்த தேர்தலில் சிறிய கட்சிகளும், ஒவ்வொரு ஜாதி பிரிவினரின் ஓட்டுகளும், தேர்தல் முடிவை மாற்றக் கூடிய சக்திகளாக உள்ளன. அதே போல், நடுநிலையாளர்களின் ஓட்டுகளும், அடுத்தது ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை முடிவு செய்யும் நிலையில் உள்ளது.

பிரியங்கா பிரசாரம் செய்யாதது ஏன்?

உ.பி., மாநிலம், அமேதி லோக்சபா தொகுதிக்கு உட் பட்ட, சட்டசபை தொகுதிகளில், காங்., வேட்பாளர் களை ஆதரித்து, காங்., துணைத் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா,பிரசாரம் செய்யாததற்கான காரணம் குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, ஸ்மிருதி கூறியதாவது:
உ.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆளும் சமாஜ்வாதியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, மக்களை சந்திக்க பயம். எனவே தான், பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம், காங்., துணைத் தலைவர் ராகுலை அழைத்துச் செல்கிறார். ஆனால், லோக்சபா தேர்தலில், ராகுல் வெற்றி பெற்ற அமேதி தொகுதி மக்களை சந்திப்பதில், காங்கிரசினருக்கு பயம். ஏனென்றால், தேர்தல் பிரசாரத்தின் போது, அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற வில்லை. இதனால் தான், ராகுலின் சகோதரி பிரியங்கா, அமேதி தொகுதியில் பிரசாரம் செய்ய மறுக்கிறார்.

லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், தொகுதி மக்களை தொடர்ந்து சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிவதால் தான், என்னால் இங்கு தைரியமாக பிரசாரம் செய்ய வர முடிகிறது.சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, உ.பி.,யில், பா.ஜ., தலைமையி லான ஆட்சி அமைய வேண்டும் என்பதே, ஒவ்வொரு தொண்டனின் விருப்பம். அதற்கா கவே, அனைவரும் பாடுபட்டு உழைக் கிறோம்; நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரம் இன்று ஓய்வு

உ.பி.,யில், ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல், 19ல் நடக்க உள்ளது. அதற்கான பிரசாரம், இன்று மாலையுடன் முடிகிறது. மாநிலத்தின், 12 மாவட்டங்களில் உள்ள, 69 தொகுதிகளுக்கு, மூன்றாம் கட்டத்தில் தேர்தல் நடக்க உள்ளது. 2012 சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி, 55 தொகுதிகளில் வென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக