புதன், 1 பிப்ரவரி, 2017

பிள்ளை பிடிகாரன் வருகிறான் ! இளைஞர் கட்சிக்கு தலைமை தாங்க தயார்: ராகவா லாரன்ஸ்,

அடப்பாவி சோறு போட்டது இதுக்குத்தானா ?
நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ், ‘தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரத் தயார்’ என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இளைஞர்கள் கட்சிக்கு தலைமை தாங்க ரெடி, என்கிறார். ஜல்லிக்கட்டுக்கு தன்னெழுச்சியாக நடந்த இளைஞர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தார் லாரன்ஸ். மெரினாவில் நடந்த போராட்டங்களின் போது, களத்திலும் செயல்பட்டார். இந்நிலையில் லாரன்ஸ், ‘தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரத் தயார். இளைஞர்கள், மாணவர்கள் முடிவெடுத்தால் அனைத்து தொகுதியிலும் நிற்போம். நான் அரசியலில் வர வேண்டுமா, இல்லையா என்பது பற்றி இளைஞர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். என்னுடன் இருக்கும் மாணவர்கள் எந்தக் கட்சியிலும் இருக்கக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள் ‘ எனக் கூறியுள்ளார். அவர் மேலும், ‘போராட்டங்களின் போது என் மனைவியின் நகைகளை அடகுவைத்து போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன்.’ என்றும் பேசினார். இதனால் நெட்டிசன்ங்கள் கடும் கண்டனம் தெரிவித்தபடி இருகின்றனர். சோறு போட்டது இதுக்குத்தானா ? நீ பக்கா அரசியல்வாதிடா என்று கழுவிக் கழுவி ஊற்றுகின்றனர்.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக