புதன், 1 பிப்ரவரி, 2017

ஜல்லிகட்டு போராட்டத்திற்கு உணவு .. சரவணா பவன் சீல் .. அடுத்தது ஆனந்த பவன் ..

மாணவர்களின் அமைதியான போராட்டத்தை உலகமே வியந்து போற்றியது. ஒரு சிறு கல்வீச்சு கூட இல்லாமல் அறப்போர் செய்து வெற்றி பெற்றனர். சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் சினிமா நடிகர்கள் உணவு அளித்து வந்தனர். அதேப்போல சரவணபவன் ஓட்டல் நிறுவனமும், அடையாறு ஆனந்த பவனும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவர்களுக்கு இலவசமாக உணவு அளித்தன. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் இயங்கி வரும் சரவணபவன் ஓட்டலில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது முறையான அனுமதி பெறாமல் ஓட்டலை நடத்தி வந்துள்ளதாக அதிகாரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல ஆனந்தபவனுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. மாணவர்கள் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருகிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும்,அரசு அதிகாரிகளும் உணர வேண்டும்.லைவ்டே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக