சனி, 4 பிப்ரவரி, 2017

கடலில் கழிவை கொட்டுவது பன்னாட்டு கம்பனி., சுத்தம் செய்வது நம் மாணவர்களா?

நியாண்டர் செல்வம்thetimestamil.com: நியாண்டர் செல்வம்;
பத்து ஆண்டுகளுக்கு முன் லூசியானா கடலில் ப்ரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனி உலகின் மிகப்பெரிய ஆயில் கசிவை நிகழ்த்தியது.
ennore-2அதற்கு தண்டனையாக ஆயிலை சுத்தபடுத்தும் செலவை ஏற்றதுடன், ஆயில்கசிவால் பாதிப்படைந்த கடற்கரைகள், கடற்கரையோர வீடுகள், உணவகங்கள் என அனைவரின் வணிக பாதிப்பையும் ஈடுகட்ட 20 பில்லியன் டாலர் நஷ்ட ஈட்டையும் கொடுத்தது. கம்பனியின் சி.இ.ஓ பதவி விலகினார்.
எக்ஸான் கம்பனி இதுபோல அலாஸ்காவில் வால்டேஸ் எனும் கப்பலில் ஆயில்கசிவை நிகழ்த்தியதால் ஆர்ட்டிக் கடலையும் அவர்கள் சுத்தம் செய்து தந்தார்கள்.
நம் ஊராக இருந்தால் மாணவர்கள் கையில் பக்கட்டை கொடுத்து வடதுருவத்துக்கு அனுப்பி சுத்தம் செய்துதர சொல்லி இருப்பார்கள்.
ஆயில்கசிவுக்கு காரணமானது ப்ரிட்டிஷ் கப்பல்..ஆக குப்பையை அவன் போடுவான், சுத்தம் செய்வது நம் மாணவர்களா?
கடலில், கரையில் மாணவர்கள் ஆயிலில் வழுக்கி விழுந்து உயிர்துறந்தால் பிணத்துக்கு மலர்வலையம் வைக்க கூட எவனும் வரமாட்டான். பேஸ்புக்கில் ஒரு சோக சிரிப்பான் போட்டுவிட்டு தல 57 பட விமர்சனம் எழுதிக்கொண்டு இருப்பார்கள்.

ஆயில் கசிவை எப்படி கடலில் இருந்து அகற்றுவது என்பது ஆயில் கம்பனிகளுக்கு தெரியும். ஏனெனில் அவர்கள் தொழிலே இதுதான். இது பக்கட்டையும், மாணவர்களையும் வைத்து செய்யும் வேலை அல்ல இது
இங்கிலாந்து தூதரை அழைத்து ஒரு காய்ச்சு காய்ச்சி அதை சுத்தம் செய்ய கட்டளை இடாமல் என்ன சின்னபுள்ள விளையாட்டு இது?
கடலில் கழிவை கொட்டுவது பன்னாட்டு கம்பனி., சுத்தம் செய்வது நம் மாணவர்களா?
நியாண்டர் செல்வன், பேலியோ டயட்  நூலின் ஆசிரியர்.
Photo: Antony Kebiston (பச்சை தமிழகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக