சனி, 4 பிப்ரவரி, 2017

சுப்பிரமணியசாமியை கண்டித்து சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் தமிழ்ப் பொறுக்கிகள் என்று தொடர்ந்து எழுதி வரும் சு.சாமியைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (சனிக்கிழமை) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சு.சாமி ட்விட்டரில் பதிவேற்றியுள்ள பதிவுகள் சிலவற்றைப் பாருங்கள்:

 1. மெரினாவில் மாணவர்கள் தடியடிக்கு உள்ளான அன்று அவர் இட்ட பதிவு "Today the TN govt has thrashed all porukkis who tried flouting SC stay order on Jallikkattu. Are OPS and VKS also not Tamil anymore. Ha!ha! (23 Jan 17/ 6.30 pm) (இன்று, சல்லிக்கட்டு மீதான உச்ச நீதிமன்றத் தடை ஆணையைக் கவிழ்க்க . முயன்ற 'பொறுக்கிகள்' அனைவரையும், தமிழக அரசு அடித்து நொறுக்கியது. இனிமேல் ஓபிஎஸ், விகேஎஸ் (சசிகலா) ஆகியோரும் தமிழர்கள் இல்லையா? ஹா! ஹா!)

2. தடியடி நடந்த மறுநாள் அவர் இட்ட பதிவு "Porkis dared me to come to Marina. Lord Shiva sent police and porkis ran away howling aiyo aiyo. Now porkis say come to TN. Shiva to decide.(24 Jan 17/ 6.30 pm) ( பொறுக்கிகள் என்னை மெரினாவுக்கு அழைக்கத் துணிந்துள்ளனர். சிவபெருமான் காவல்துறையை அனுப்பினார். பொறுக்கிகள் ஐயோ ஐயோ என்று 'ஊளையிட்டபடி' ஓடிவிட்டனர். பொறுக்கிகள் என்னைத் தமிழ்நாட்டுக்கு வரச் சொல்கின்றனர். சிவாதான் முடிவு செய்ய வேண்டும்) மேலே உள்ளவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. தொடர்ந்து இவ்வாறே அவர் தமிழர்கள் குறித்து எழுதி வருகிறார். மானமுள்ள தமிழர்களே, மாணவர்களே, இளைஞர்களே! சு.சாமியின் இந்தத் திமிர்த்தனத்தை அடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சு.சாமியையும், அவரைக் கண்டிக்காத பா.ஜ.க வையும் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர்கள் அனைவரும் அணி திரள்வோம்! அமெரிக்கா வாழ் தமிழர்கள் சியாட்டிலில் அந்த (ஆ)சாமியை அடித்து விரட்டிய நிகழ்வை நினைவு கொள்வோம். கண்டன ஆர்ப்பாட்டத்தில் இது போன்ற தரங்கெட்ட மனிதர்களை எதிர்த்துக் குரல் கொடுப்போம் !! வாருங்கள் தமிழர்களே! .


படங்கள்: அசோக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக