புதன், 8 பிப்ரவரி, 2017

பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு .. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு .. பன்னீரும் ஸ்டாலினும் சிரிக்கலாமா? சசி அதிரடி கேள்வி!

)(சசிகலா அருள்வாக்கு :பன்னீர்செல்வத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது. காரணம், சட்டமன்றத்தில் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் நான்கு நாட்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும்  சிரித்துக் கொண்டார்கள்- ' அதுதானே மரபு ?
இதைப் படித்து நீங்களும் சிரித்தால் சதிகாரர்களே!)(

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்து மெளன அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெற தயார் என கூறியுள்ளார். எனவே பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் ஒருவரே பகிரங்கமாக இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளதால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அல்லது ஆட்சியையும் கலைக்க வாய்ப்புள்ளது. இந்த களேபரங்கள் காரணமாக சசிகலாவுக்கு முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைக்க ஆளுநர் விரும்ப மாட்டார் என்று தெரிகிறது.
அடுத்தவாரம் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக உள்ளதால் இதையெல்லாம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கருத்தில் கொள்வார் என தெரிகிறது தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக