புதன், 8 பிப்ரவரி, 2017

Don't under estimate OPS ! பன்னீர்செல்வம் ஆட்சி அமைக்க போதிய எம் எல் ஏக்கள்?

மன்னார்குடி கும்பலுக்கு மூளை கிடையாது என்பது திரும்ப திரும்ப நிரூபணமாகிறது.
இருக்கிறது 133 எம்.எல்.ஏக்கள். அதுல ஆட்சி அமைக்கணும்னா 118 பேரு வேணும். ஆக, 15 - 16 எம்.எல்.ஏக்கள் ஒபிஎஸ்ஸிடம் போனால் கூட ததிகிணத்தோம் தான். 15 - 16 எம்.எல்.ஏக்கள் எல்லாம் சர்வ சாதாரணம். சி.வி. சண்முகம் ஒபிஎஸ் பக்கம் நின்றால், இருக்கும் வன்னிய எம்.எல்.ஏக்கள் எல்லாம் இந்த பக்கம். பரிதியும், தனபாலும் நின்றால் தலித் எம்.எல்.ஏக்கள் நிற்பார்கள். இது தாண்டி, மதுரையை தாண்டி அந்த பக்கம் (தேனீ, கம்மம், பெரியகுளம்) ஒபிஎஸ்ஸின் சொந்த செல்வாக்கே ஏகத்திற்கு இருக்கிறது. அடிமட்ட அதிமுக தொண்டன் சசிகலாவிற்கு எதிராக இருக்கிறான். திமுக தெளிவாக ஒபிஎஸ்ஸிற்கு பக்கபலமாக இருப்போம் என்று நேரடியாக சொல்லிவிட்டது. இப்ப சண்டைப் போட்டு கலைஞ்சு, மெஜாரிட்டி நிரூபிக்க முடியாம, திரும்பவும் தேர்தல் வந்தா கண்டிப்பா அதிமுக வராதுன்னு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கேத் தெரியும். இப்போதைக்கு புத்திசாலித்தனம் ஒபிஎஸ்ஸோட போய், மக்கள் வெறுப்பை சம்பாதிக்காம, 4.5 வருடங்களை ஒட்டறது. இப்ப இருக்கிற 4.5 வருஷத்தையும் காப்பாத்திக்கணும்னா ஒரு அதிமுக எம்.எல்.ஏ எந்த பக்கம் போவாரு ?
சிம்பிள் லாஜிக் - பிடிக்குதோ, பிடிக்கலையோ ஒபிஎஸ் பக்கம் ஒதுங்குவாரு. வேலை முடியும். கேம் ஒவர்.
கூட்டிக் கழிச்சுப் பாருங்க, கணக்கு சரியா வரும்.  Narain Rajagopalan  முகநூல் பதிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக