செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

வைகோ : ஸ்டாலின் தற்கொலை செய்துகொள்வேன் என்றார் .. துரைமுருகன் பிளேட்டால் கைகளை அறுத்து ..

"ஸ்டாலின் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் துரைமுருகன் < பிளேடுகளால் கைகளை அறுத்துக் கொள்வேன் எனவும் சட்டமன்ற பாதுகாவலர்களை மிரட்டினார்கள்" என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் வைகோ.
தமிழக அரசு நிர்வாகம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முடங்கியதை குறித்தோ, ஆளும் அதிமுகவில் நடந்துவரும் கூத்துக்களைப் பற்றியோ, முதல்வர் பதவிக்கான போட்டி குறித்தோ, சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பை குறித்தோ, ஜெயா & சசிகலாவுக்கு கிடைத்த தண்டனைகள் பற்றியோ, கருத்தை கேட்க, ஊடகங்கள் மைக்கை நீட்டிபோதெல்லாம், "கருத்து கூற விரும்பவில்லை" என்று சொல்லிட்டு வாயை போத்திக் கொண்டு கருவேலங்காட்டில் ஒளிந்து கொண்ட இந்த வைகோ, இப்போது திமுக குறித்து செய்திகள் வந்தவுடன், ஓடிவந்து ஆஜராகிறார். அவதூறுகளை அள்ளி வீசுகிறார். சசிகலா குரூப்பை நேரடியாக ஆதரிக்க முடியாமல் வைகோ திமுகவிற்கு எதிராக ஏதேதோ உளறிக்கொட்டி கொண்டிருக்கிறார். நடராஜன் வீசும் ஒற்றை எலும்புக்காக நாக்கை தொங்கப்போட்டு காத்திருக்கும் அரசியல் அசிங்கம் வைகோ. நாளை ஸ்டாலினை எதிர்க்க தீபாவின் காலடியிலும் இந்த மனிதர் விழும் காலம் வெகு விரைவில் வரும்
முகநூல் பதிவு  ஸ்ரீனிவாசன் ஜே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக