செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

ஜல்லிகட்டுக்கு எதிராக பீட்டா மீண்டும் வழக்கு தொடர ஆயத்தம்!

புதுடெல்லி: தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் அனுமதிக்கும் தீர்மானத்தை  அமைச்சரவை கடந்த மாதம் நிறைவேற்றியது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலை பெற்ற இந்த தீர்மானம் சட்ட வடிவம் பெற்று, மத்திய அரசின் அறிவிக்கையாகவும் வெளியானது. தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடக மாநில அரசும் எருமை மாடுகளை கட்டியிருக்கும் கயிற்றை பிடித்தபடி சகதியில் ஓடும் பாரம்பரியமிக்க ‘கம்பளா’ விளையாட்டை மீண்டும் நடத்த வகை செய்யும் அவசர சட்ட மசோதா அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, முன்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, சாதகமான தீர்ப்பை பெற்ற பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு இவ்விவகாரத்தில் வழக்கு ஏதும் தொடராமல் மவுனம் காத்து வந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு மற்றும் கம்பளா போட்டிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கும் சட்டத்தை எதிர்த்து இன்னும் சில நாட்களில் வழக்கு தொடருவோம் என்று பீட்டா அமைப்பை சேர்ந்த மணிலால் வல்லியாட்டே என்பவர் இன்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக