புதன், 22 பிப்ரவரி, 2017

வளர்மதி. சரஸ்வதி .கோகுல இந்திராவை துரத்திய பெங்களூரு போலீஸ்


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 15ஆம் தேதியன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா சிறை சென்று இன்றோடு ஒரு வாரகாலமாகிவிட்டது. அவரைக்காண சென்ற கோகுல இந்திரா, பா. வளர்மதி, சி.ஆர். சரஸ்வதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மூவரும் சோகத்தோடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் நேற்று சசிகலாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தநிலையில், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் நடிகை சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் இன்று பெங்களூரு சென்றனர். பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் சிறை அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாம். தண்டனை பெற்று சிறையில் உள்ள குற்றவாளியை வாரத்திற்கு 2 முறை மட்டுமே பார்வையாளர்களை சந்திக்க அனுமதிப்போம் என்று சிறை நிர்வாகம் கூறிவிட்டதால் மூன்று பேரும் சோகத்தோடு திரும்பிவிட்டார்களாம். இதேபோல அமைச்சர்களும் சசிகலாவை சந்திக்காமலேயே திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தினசரியும் சிலர் சசிகலாவை சந்தித்து பேச பெங்களூரு சென்று வருகின்றனர். இதையே காரணமாக வைத்து சசிகலாவை சென்னை புழல் சிறைக்கு அவரது வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக