ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

வையாபுரி கோபாலசாமி : நான் சசிகலாவை ஆதரிக்கிறேன் என்று தவறாக பிரசாரம் செய்கிறார்கள்!


சசிகலாவை நான் ஆதரிக்கிறேன் என்று தவறாக பிரசாரம் செய்கிறார்கள் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் 25-வது பொதுக்குழு கூட்டம்
கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உட்பட மாநிலம் முழுவதிலுமிருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற பொதுகூட்டத்தில், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை பாழ்படுத்தக் கூடிய ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மற்றும் பவானி மற்றும் பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "நான் சசிகலாவை ஆதரிக்கிறேன் என தவறாக பிரசாரம் செய்கிறார்கள். திமுக பற்றி கருத்து தெரிவித்ததற்கு முகநூலில் என்னை இழிவாக சித்தரித்தார்கள். தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. திராவிட இயக்கங்களுக்கு சோதனையான காலம் இது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக யாருடனும் கூட்டணி வைக்காது. வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதிகளில் மதிமுக போட்டியிடும். என்று கூறினார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக