ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

ஜெயலலிதா பிறந்தநாள் ..அதிமுக பொதுக்கூட்டம்...120 பேர் கலந்துகொண்டனர் ..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தச் சொல்லி ஆணையிட்டது அதிமுக தலைமை. கடந்த 24ந் தேதி சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 120 நபர்கள் மட்டுமே கலந்துக்கொண்டார்கள், அதுக்கு இருமடங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று 25-ஆம் தேதி இரவு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் எம்.எல்.ஏ, கே.ஏ. பாண்டியன், காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ,முருகுமாறன், முன்னால் எம்.எல்.ஏ, செல்வி ராமஜெயம் கலந்து கொண்டார்கள். கட்சியினர் 50-க்கும் குறைவாக இருந்ததால் என்ன பேசுவது என்று தெரியாமல் கூட்டத்தை முடித்துக்கொண்டார்கள், விழுப்புரம் மாவட்டம் மரக்கானம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் குறைவாக இருந்ததால் எம்.எல்.ஏ,க்கள் யாரும் வராமல், தெருமுனை பிரசாரம் போல் முடித்துக்கொண்டார்கள்.

கடலூர் தொகுதி எம்.எல்.ஏ,வும், அமைச்சருமான எம்.சி.சம்பத் 25ஆம் தேதி தொகுதிக்கு வந்தபோது பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் வலம் வந்தார். சுற்றுலா மாளிகையில் இருந்தபோது 250 பேர் கூட்டமாக இருக்க, நகர நிர்வாகிகள், அமைச்சரிடம் அண்ணே கூட்டம் நமக்கு அதிகமாக வந்துள்ளது என்று கூறியபோது, கோபத்துடன் வெறுப்பான அமைச்சர் சம்பத், வந்திருக்கும் கூட்டம் சத்துணவு பொறுப்பாளர்கள் வேலைக்காக ரெக்கமேண்டஷனுக்கு வந்திருக்காங்க. மற்றவர்கள் திருப்பாபுலியூர் நத்தவெளி ரோட்டில் குடியிருப்பவர்களை காலிசெய்யசொன்னதால், குறைசொல்ல வந்தவங்க என்று எரிச்சலுடன் கூறியுள்ளார். அதைக்கேட்ட கட்சியினர் சத்தமின்றி கப்சிப்பாகினர். . மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக