ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

அருண்குமார் எம் எல் ஏ: அதிமுக தனி ஒரு குடும்பத்தின் பின்னால் செல்கிறது!

arunkumar
தனியொரு குடும்பத்தின் பின்னால் அதிமுக செல்வதை எனது மனசாட்சி ஏற்றுக்கொள்ளாததால், சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று அதிமுகவின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தெரிவித்தார்.
கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த அருண்குமார் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் புறப்பட்டு பெரியநாயக்கன்பாளையம் வந்தடைந்தார். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் அதிமுக தொண்டர்கள் அவரை சனிக்கிழமை சந்தித்தனர்.
இது குறித்து அவர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் நிலைமை சரியில்லை. குடும்ப அரசியலுக்கு துணை போகவேண்டாம் என தொகுதி மக்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.

எனவே, எனது மனசாட்சிப்படி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வீடு திரும்பி விட்டேன். பதவிக்காகவும், பணத்துக்காகவும் நான் கட்சியில் இல்லை. ஓ.பி.எஸ்., தீபாவுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி தொண்டர்களுடன் கூடி ஆலோசித்து முடிவெடுப்பேன் என்றார்.  தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக