ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு ... பின்னணியில் ஸ்டார்?


பல தமிழ்படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டு இரவில் காரை தானே ஓட்டியவாறு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு கார், அவர் கார் மீது மோதி நின்றது. காரில் இருந்து மூன்று இளைஞர்கள் கீழே இறங்கி, பாவனாவிடம் தகராறு செய்தனர். அப்போது பாவனா காரை விட்டு கீழே இறங்கினார். உடனே அந்த மூன்று இளைஞர்கள் பாவனாவை, தங்கள் காரில் வலுக்கட்டாயப்படுத்தி ஏற்றினர். கார் அங்கிருந்து புறபட்டு சென்றது. காரில் செல்லும் போது நடிகை பாவனாவை இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். சுமார் இரண்டு மணிநேரம் காரில் வைத்து பல இடங்களுக்கு சுற்றிய இளைஞர்கள் பாவனாவிடம் இருந்த செல்போன் பணத்தை பிடிங்கி கொண்டு ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கீழே இறக்கிவிட்டு சென்றது.
இது குறித்து கேரளா போலீஸில் பாவனா புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு கேரள மாநில அரசு மற்றும் சினிமா துறையினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக