ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

கமலஹாசன் :மக்களை போலவே நானும் அரசு மீது கோபமாகவே இருக்கிறேன் ..சட்டசபையை கலைத்து தேர்தல் ...



தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடைபெற்ற சம்பவம் மற்றும் மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் கூறியதாவது:- ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட பின்னர் சசிகலாவின் குடும்பம் என்னும் கிரிமினல் கூட்டத்தாரால் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். நான் கூறுவது உண்மை என்பது நீதிமன்றத்தால் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட குற்றம்சாட்டப்பட்டவர்தான். தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் வேண்டுமானால் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றிருக்கலாம்; ஆனால், தெருக்களில் உள்ள உணர்ச்சி கொந்தளிப்பு வேறு எதையோ குறிப்பிடுகிறது. நமது சட்டசபையை நாம் தூய்மைப்படுத்த வேண்டும். மக்கள் தங்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அரசியலுக்கு வர நான் தகுதியற்றவன் என்றும் இந்த பேட்டியின்போது குறிப்பிட்ட கமல்ஹாசன், நான் மிகவும் கோபக்காரன். கோபக்காரர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை, எதையும் நடுநிலையாக அணுகும் அரசியல்வாதிகள் தான் இன்று நமக்கு தேவை. தற்போது நானும் கோபமாக இருக்கிறேன், மக்களும் கோபமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.தனிதந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக