திங்கள், 30 ஜனவரி, 2017

எங்கே அந்த மாஸ்? எங்கே அந்த வசூல்? பாட்சாவுக்கு மட்டுமல்ல எவருக்குமே இனி மாஸ் நோ ! ஒன்லி புஸ் வாணம்?

ரஜினி நடிப்பில் சூப்பர், டூப்பர் ஹிட்டான பாட்ஷா படம் சமீபத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியானது. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகும் டிஜிட்டலில் மாற்றப்பட்டு வெளிவந்த இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் அதிகளவில் இருப்பதால் இப்படத்தை ஜப்பானிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரஜினியின் புதுப்படங்கள் எப்போது வெளியானாலும், ஜப்பானிலும் வெளியிடப்படும். அதேபோல், டிஜிட்டலில் மாற்றப்பட்ட ‘பாட்ஷா’ படமும் தற்போது வெளியாகவிருக்கிறது. ஆனால், நடந்து முடிந்த மாணவர்களின் மெரீனாப் புரட்சி பல சினிமா ஹீரோக்களின் முக மூடிகளைக் கிழித்து எறிந்து விட்டது. குறிப்பாக ரஜினியின் பக்கா சுயநலம். அவரது ரசிகர்களையே கோபம் கொள்ளச் செய்து விட்டது. தமிழக மக்களை அவர் திட்டமிட்டு ஏமாளிகள் ஆக்கி விட்டார். இது பெரும் கொதிப்பை உண்டாக்கி விட்டது. இதனால், பாட்ஷா டிஜிட்டல் முறையில் தயாரித்தவர்கள். பயங்கர அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இனி ரஜினி படங்கள் தமிழில் போணியாகாது என்பது புரிந்து கவலையில் ஆழ்ந்து விட்டனர். அவ்வளவு பெரிய ரஜினி மாஸ் மாணவர் மாஸிடையே தகர்ந்து நொறுங்கி விட்டது. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக