திங்கள், 9 ஜனவரி, 2017

சேப்பாக்கம் .விவசாயிகள் செத்துமடிவதை தடுக்க கோரி இளைஞர்கள் எழுச்சி போராட்டம்

சென்னை சேப்பாக்கத்தில் விவசாயிகளை காக்க வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் விவசாயிகள் செத்துமடிவதை தடுக்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். அரசு விருந்தினர் மாளிகை அருகே நடக்கும் உண்ணாவிரதத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றுள்ளனர். சமூக ஊடகங்கள் மூலமாக திரண்ட இளைஞர்கள் செயலற்ற அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துனீசியா, எகிப்து நாடுகள் போல தமிழகத்திலும் சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்கள் ஒன்றிணைந்தனர். முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எழுச்சிப் பேரணி நடத்தினர். ஜல்லிக்கட்டு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளைஞர்கள் மெரினாவில் திரண்டனர். மெரினாவில் கலங்கரை விளக்கத்தில் புறப்பட்டு உழைப்பாளர் சிலை வரை இளைஞர்கள் பேரணி நடத்தினர். சமூக ஊடகங்கள் மூலம் அணி திரண்ட இளைஞர்கள் கண்டு காவல் துறை அதிர்ச்சி அடைந்துள்ளனர். தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்களுடன் பொதுமக்களும் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.


வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும் கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தினகரன்

சென்னை: ஜல்லிக்கட்டு, விவசாய பிரச்சனைக்கெல்லாம் சென்னை இளைஞர்கள் வர மாட்டார்கள் என்று இருந்த மாயையை இன்று உடைத்தெறிந்தார் இளைஞர்கள். ஜல்லிக்கட்டை நடத்தவும், விவசாயிகளின் தற்கொலை தடுக்கவும் என இளைஞர்கள் சேப்பாக்கம், மெரினா பகுதியில் ஒரே நேரத்தில் கூடியதால் சென்னை திக்குமுக்காடியது. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இதே போன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் விவசாயிகளின் தற்கொலை தடுக்க வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான இளைஞர் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்தில் பெரும் திரளான பெண்களும் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களது குரலை உயர்த்தி எழுப்பினர். பேஸ்புக்கில் அழைப்பு பேஸ்புக்கில் அழைப்பு ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கும், விவசாயிகள் தற்கொலை தடுப்பு உண்ணாவிரதத்திற்கும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமான அழைப்பு மட்டுமே விடுக்கப்பட்டது. அதற்கே அவ்வளவு இளைஞர்கள் ஒன்று திரண்டுள்ளனர். இதன் மூலம் ஜாலியாக சுற்றித் திரியும் இளைஞர்கள் விவசாயம், ஜல்லிக்கட்டு பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள் என்பதை உடைந்து போயுள்ளது. இணைந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாக பேரணி நடத்திய இளைஞர்களும், விவசாயி தற்கொலைக்காக உண்ணாவிரதம் இருக்க சேப்பாக்கத்தில் திரண்ட இளைஞர்களும் ஒரே பகுதியில் ஒன்றிணைந்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் பட்டாளமே சென்னைக்கு வந்துவிட்டது போல் சேப்பாக்கம் காட்சி அளித்தது. அதிர்ந்த போலீஸ் உழைபாளர் சிலை அருகில் பேரணி முடித்த இளைஞர்களும், அதன் அருகில் இருந்த சேப்பாக்கம் விருத்தினர் மாளிகையில் உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களும் ஒன்று கூடியதால், கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த முடியால் போலீசார் திகைத்துப் போனார்கள். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் தற்கொலை என இளைஞர்கள் பட்டாளம் திரண்டதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். போக்குவரத்து பாதிப்பு இதனால் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வேலைக்கு செல்வோர், பள்ளிக்குச் செல்வோர் இல்லை என்பதால் யாரும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக