திங்கள், 9 ஜனவரி, 2017

ஜெயலலிதா = சசிகலா : காலில் விழுவது ஊரான் சொத்தை அடிச்சு பறிப்பது அதே கிரிமினல் மூளை . ... சசிகலா பார்பனர் அல்லவே ,துக்ளக் குருமூர்த்தியின் கவலை!

சசிகலாவின் காலில் விழுவது அவமானம், அதிமுக இனி சசிகலாவின் குடும்ப கட்சியாகி விடும் என்றெல்லாம் ஏகத்துக்கும் எகிறுகிறார் குருமூர்த்தி......
இத்தனை நாளும் அதிமுக எப்படி இருந்ததாம்...?
இதுவரை ஜெயலலிதா காலில் விழுந்தவர்கள் இப்போது சசிகலாவின் காலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் விழுவதற்கு.......
அதிமுக அமைச்சர்களிடம் கேட்டால், அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய், நாங்கள் பொதுவெளியில் அம்மா காலிலும் கார்டனுக்குள் சின்னம்மா காலிலும் விழுவோம் என பெருமையாகச் சொல்வார்கள்.......

சசிகலாவின் குடும்பம் இப்போது தான் முதன் முதலாக அதிமுகவிற்குள்ளோ அல்லது போயஸ்கார்டனுக்குள்ளோ நுழைகிறதா.....?
கார்டனுக்குள்ளும், அதிமுகவுக்குள்ளும் தானே இத்தனை நாளும் குடியிருந்தது.......
இதில் என்ன புதிப அவமானத்தைக் கண்டார் குருமூர்த்தி.....?
அப்படியே அவமானம் என்றாலும் அது அதிமுகவுக்கும் அதிமுகவினருக்கும் தானே தவிர குருமூர்த்திக்கு என்ன அவமானம் இருக்கிறது......?
குருமூர்த்தி என்ன அதிமுககாரரா.....?
இத்தனை நாளும் ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் என்ன நடந்ததோ, அதே தான் இப்போதும் நடக்கிறது.........
அப்போது தெரியாத அவமானமும், சசிகலா குடும்பத்தினரின் தலையீடும், இப்போது மட்டும் குருமூர்த்தியின் கண்களுக்குத் தெரிகிறதென்றால் என்ன அர்த்தம்.....?
By Zen Selvaa   முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக